• May 20 2026

பொலிஸ் அதிகாரி மீது முச்சக்கரவண்டியை ஏற்ற முயற்சி - கம்பளையில் சம்பவம்

Chithra / May 19th 2026, 7:55 pm
image

கம்பளை நகரில் பொலிஸ் அதிகாரி ஒருவரை முச்சக்கர வண்டியால் மிதிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. 


கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில், வாகனங்களை நிறுத்தத் தடை செய்யப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை அங்கிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸ் அதிகாரி  அறிவுறுத்தியுள்ளார்.


இதன்போது, சாரதியிடம் வாகன ஆவணங்களும், சாரதி அனுமதிப்பத்திரமும் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


அந்தச் சந்தர்ப்பத்தில், முச்சக்கர வண்டி சாரதி திடீரென வண்டியை இயக்கி, கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியை மிதித்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.


சம்பவத்தில் தொடர்புடைய சாரதியை அடையாளம் காணும் நடவடிக்கைகளுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பொலிஸ் அதிகாரி மீது முச்சக்கரவண்டியை ஏற்ற முயற்சி - கம்பளையில் சம்பவம் கம்பளை நகரில் பொலிஸ் அதிகாரி ஒருவரை முச்சக்கர வண்டியால் மிதிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில், வாகனங்களை நிறுத்தத் தடை செய்யப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை அங்கிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸ் அதிகாரி  அறிவுறுத்தியுள்ளார்.இதன்போது, சாரதியிடம் வாகன ஆவணங்களும், சாரதி அனுமதிப்பத்திரமும் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.அந்தச் சந்தர்ப்பத்தில், முச்சக்கர வண்டி சாரதி திடீரென வண்டியை இயக்கி, கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியை மிதித்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.சம்பவத்தில் தொடர்புடைய சாரதியை அடையாளம் காணும் நடவடிக்கைகளுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement