மத்தேகொட பகுதியில் இளம்பெண் ஒருவரை துப்பாக்கி காட்டி மிரட்டி கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உறவினர் சகோதரர்கள் இருவரை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 7ஆம் தேதி, மத்தேகொட கிரிகம் பமுனுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் சந்தேக நபர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
அவர்களிடம் விளையாட்டுத் துப்பாக்கி இருந்ததாகவும், அந்த வீட்டில் இருந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் வீட்டில் இருந்த மற்றொருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், சந்தேகநபர்கள் உடனடியாக காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மத்தேகொட பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில், கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் அடிப்படையில் கல்கிசை பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட விளையாட்டுத் துப்பாக்கி மற்றும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையே நீண்டநாள் தனிப்பட்ட தகராறு இருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டுத் துப்பாக்கி காட்டி கடத்தல் முயற்சி. பின்னணியில் வெளியான தகவல் மத்தேகொட பகுதியில் இளம்பெண் ஒருவரை துப்பாக்கி காட்டி மிரட்டி கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உறவினர் சகோதரர்கள் இருவரை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.கடந்த 7ஆம் தேதி, மத்தேகொட கிரிகம் பமுனுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் சந்தேக நபர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.அவர்களிடம் விளையாட்டுத் துப்பாக்கி இருந்ததாகவும், அந்த வீட்டில் இருந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில் வீட்டில் இருந்த மற்றொருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், சந்தேகநபர்கள் உடனடியாக காரில் தப்பிச் சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பாக மத்தேகொட பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில், கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் அடிப்படையில் கல்கிசை பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட விளையாட்டுத் துப்பாக்கி மற்றும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இரு தரப்பினருக்கும் இடையே நீண்டநாள் தனிப்பட்ட தகராறு இருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.