• May 30 2026

யாழில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும்!

Ziya / May 29th 2026, 12:06 pm
image

போதைப்பொருள் மற்றும் புகையிலைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் இன்றையதினம் சங்கானையில் இடம்பெற்றது.


ஆரம்பத்தில், போதை மற்றும் புகையிலை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக துண்டுப் பிரசுரங்கள் சங்கானை சந்தை - கடைகளின் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இதன்போது போதை மற்றும் புகையிலைக்கு எதிரான பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு கருத்துப் பகிர்வு இடம்பெற்றது.


வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கானை பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர், வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர், சமூக மட்ட அமைப்பினர், வர்த்தகர்கள் மற்றும் போதைக்கு எதிரானோர் கலந்துகொண்டனர்.

யாழில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் போதைப்பொருள் மற்றும் புகையிலைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் இன்றையதினம் சங்கானையில் இடம்பெற்றது.ஆரம்பத்தில், போதை மற்றும் புகையிலை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக துண்டுப் பிரசுரங்கள் சங்கானை சந்தை - கடைகளின் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இதன்போது போதை மற்றும் புகையிலைக்கு எதிரான பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு கருத்துப் பகிர்வு இடம்பெற்றது.வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கானை பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர், வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர், சமூக மட்ட அமைப்பினர், வர்த்தகர்கள் மற்றும் போதைக்கு எதிரானோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement