• Jul 07 2024

ஹிருணிகாவின் பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு..!

Chithra / Jul 4th 2024, 11:24 am
image

Advertisement

 

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இந்த பிணை கோரிக்கை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

அங்கு, இந்த கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபர் எதிர்பார்ப்பதாக தெரிவித்த அரச சட்டத்தரணி, எழுத்து மூலம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு ஒத்திவைக்குமாறும் கோரினார்.

இதன்படி, சட்டமா அதிபருக்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அனுமதித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பிணை கோரிக்கையை எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் உத்தரவிட்டார்.

ஹிருணிகாவின் பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு.  மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.இந்த பிணை கோரிக்கை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.அங்கு, இந்த கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபர் எதிர்பார்ப்பதாக தெரிவித்த அரச சட்டத்தரணி, எழுத்து மூலம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு ஒத்திவைக்குமாறும் கோரினார்.இதன்படி, சட்டமா அதிபருக்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அனுமதித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பிணை கோரிக்கையை எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement