• Apr 03 2025

லொறியுடன் பேருந்து மோதி கோர விபத்து! ஒருவர் பலி; 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Jul 4th 2024, 11:19 am
image

 

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (4) வியாழக்கிழமை காலை  இடம்பெற்றுள்ளது.

லொறி ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில்  காயமடைந்தோர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

விபத்து இடம்பெற்ற போது அப்பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்டதாகவும் மாதம்பே பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


லொறியுடன் பேருந்து மோதி கோர விபத்து ஒருவர் பலி; 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி  சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று (4) வியாழக்கிழமை காலை  இடம்பெற்றுள்ளது.லொறி ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில்  காயமடைந்தோர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்விபத்து இடம்பெற்ற போது அப்பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்டதாகவும் மாதம்பே பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement