• Sep 20 2024

சீனாவின் CCTV கேமராக்களுக்கு தடைவிதித்த ஆஸ்திரேலியா - வெளிவந்த பின்னணி!

Tamil nila / Feb 9th 2023, 5:06 pm
image

Advertisement

அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் தங்களது நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு அலுவலகங்களில் உள்ள சீன நிறுவனத்திற்கு சொந்தமான CCTV கேமராக்களை அகற்ற இருப்பதாக அறிவித்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளும் சீனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. 


கடந்த 2020ம் ஆண்டு ஹவாய் சர்ச்சையை அமெரிக்கா கையில் எடுத்தது. அதன்படி இனி ஹவாய் நிறுவனம் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தக்கூடாது என்றும், அமெரிக்காவில் இந்நிறுவனம் செமிகண்டக்டர்களை உருவாக்க கூடாது என உத்தரவிட்டது. 


இது சீனாவின் ஹாவய் நிறுவனத்திற்கு பலத்த அடியாக பார்க்கப்பட்டது. சீனா தனது நிறுவனங்கள் மூலம் உளவு பணிகளில் ஈடுபடுகிறது என்பதுதான் அமெரிக்காவின் குற்றச்சாட்டு.


ஸ்மார்போன் சந்தையில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக ஹவாய் இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் உத்தரவால் அந்நிறுவனம் கடும் அதிருப்பதியடைந்தது. இதனையடுத்து இந்தியா, சீனா தொடர்பான செயலிகளை தடை செய்தது. இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவும் தற்போது இணைந்திருக்கிறது. 


அதாவது சில நாட்களுக்கு முன்னர் சீன நிறுவனத்தின் CCTV கேமராக்களை பயன்படுத்த மட்டோம் என்று அமெரிக்க மறுப்பு தெரிவித்தது. இந்த கேமராக்கள் மூலம் உளவு பார்க்க வாயப்பிருப்பதால் அரசு அலுவலகங்கள், கட்டிடங்கள் போன்றவற்றில் இந்த கேமராக்களை நிறுவ அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது.



இதனையடுத்து பிரிட்டனும் இதே நிலைப்பாட்டை மேற்கொண்டது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 67 மேலவை உறுப்பினர்களும் சீன CCTV கேமராக்ககள் குறித்து அச்சம் தெரிவித்த நிலையில், அரசு அலுவகங்கள் மற்றும் சில முக்கிய இடங்களிலிருந்து சீன கேமராக்கள் அகற்றப்படும் எனவும், இனி புதியதாக நிறுவும் கேமராக்கள் சீன நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்காது என்றும் அந்நாட்டு அரசு கடந்த நவம்பர் மாதம் உறுதியளித்திருந்தது. தற்போது ஆஸ்திரேலியா பாதுகாப்புத்துறை அமைச்சகமும் இதையேதான் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் கூறுகையில்,


சீன நிறுவனங்களின் கேமராக்களை ஆஸ்திரேலிய அரசு தனது அரசாங்க கட்டிடங்கள் உள்ளிட்ட பல முக்கியமான இடங்களில் பொறுத்தியுள்ளது. ஆனால், இந்நிறுவனங்களை சீன அரசு மிரட்டி கேமராக்களில் பதிவான சில முக்கியமான தகவல்களை கேட்டு பெறாது என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? எனவே  இந்த சந்தேகம் காரணமாக நாங்கள் சீன நிறுவனங்களின் கேமராக்களை அகற்ற இருக்கிறோம் என்று கூறியுள்ளார். அந்நாட்டின் பாதுகாப்புத்துறை கட்டிடம் உட்பட சுமார் 200 அரசு கட்டிடங்களில் சீன நிறுவனத்தின் கேமராக்கள் பொறுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பையடுத்து கேமராக்கள் விரைவில் அகற்றப்படலாம்.



ஆஸ்திரேலிய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் Hikvision மற்றும் Dahua ஆகிய சீன நிறுவனங்கள் கடும் அதிருப்பதியடைந்துள்ளன. ஏனெனில் இந்த நிறுவனத்தின் கேமராக்களைதான் ஆஸ்திரேலிய மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இரு நிறுவனங்கைளும் ஏற்கெனவே அமெரிக்க அரசு பிளாக் லிஸ்ட்டில் வைத்திருக்கிறது. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய சுகாதாரச் செயலர் மாட் ஹான்காக் அவர் உதவியாளருக்கு முத்தம் ஒன்றை கொடுத்திருக்கிறார். முத்தம் கொடுத்தது பிரச்னையில்லை, ஆனால் கோவிட் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த காலம் அது.


எனவே ஒருவரையொருவர் முத்தம் கொடுத்துக்கொள்ளக்கூடாது என்று உத்தரவு பின்பற்றப்பட்டு வந்திருந்தது. எனவே இந்த முத்தக்காட்சிகள் CCTVயில் பதிவாகி பின்னர் அது வெளியில் தெரிந்து பெரும் பஞ்சாயத்தை கூட்டியது. இதில் விஷயம் என்னவெனில் அந்த CCTV சீனாவை சேர்ந்த Hikvision நிறுவனத்தினுடையதாகும். ஆகவே இந்த பிரச்னைகளை பேசி Hikvision நிறுவனம் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சித்தரிப்பது தவறானது என Hikvision நிறுவனம் கூறியுள்ளது.

சீனாவின் CCTV கேமராக்களுக்கு தடைவிதித்த ஆஸ்திரேலியா - வெளிவந்த பின்னணி அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் தங்களது நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு அலுவலகங்களில் உள்ள சீன நிறுவனத்திற்கு சொந்தமான CCTV கேமராக்களை அகற்ற இருப்பதாக அறிவித்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளும் சீனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. கடந்த 2020ம் ஆண்டு ஹவாய் சர்ச்சையை அமெரிக்கா கையில் எடுத்தது. அதன்படி இனி ஹவாய் நிறுவனம் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தக்கூடாது என்றும், அமெரிக்காவில் இந்நிறுவனம் செமிகண்டக்டர்களை உருவாக்க கூடாது என உத்தரவிட்டது. இது சீனாவின் ஹாவய் நிறுவனத்திற்கு பலத்த அடியாக பார்க்கப்பட்டது. சீனா தனது நிறுவனங்கள் மூலம் உளவு பணிகளில் ஈடுபடுகிறது என்பதுதான் அமெரிக்காவின் குற்றச்சாட்டு.ஸ்மார்போன் சந்தையில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக ஹவாய் இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் உத்தரவால் அந்நிறுவனம் கடும் அதிருப்பதியடைந்தது. இதனையடுத்து இந்தியா, சீனா தொடர்பான செயலிகளை தடை செய்தது. இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவும் தற்போது இணைந்திருக்கிறது. அதாவது சில நாட்களுக்கு முன்னர் சீன நிறுவனத்தின் CCTV கேமராக்களை பயன்படுத்த மட்டோம் என்று அமெரிக்க மறுப்பு தெரிவித்தது. இந்த கேமராக்கள் மூலம் உளவு பார்க்க வாயப்பிருப்பதால் அரசு அலுவலகங்கள், கட்டிடங்கள் போன்றவற்றில் இந்த கேமராக்களை நிறுவ அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது.இதனையடுத்து பிரிட்டனும் இதே நிலைப்பாட்டை மேற்கொண்டது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 67 மேலவை உறுப்பினர்களும் சீன CCTV கேமராக்ககள் குறித்து அச்சம் தெரிவித்த நிலையில், அரசு அலுவகங்கள் மற்றும் சில முக்கிய இடங்களிலிருந்து சீன கேமராக்கள் அகற்றப்படும் எனவும், இனி புதியதாக நிறுவும் கேமராக்கள் சீன நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்காது என்றும் அந்நாட்டு அரசு கடந்த நவம்பர் மாதம் உறுதியளித்திருந்தது. தற்போது ஆஸ்திரேலியா பாதுகாப்புத்துறை அமைச்சகமும் இதையேதான் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் கூறுகையில்,சீன நிறுவனங்களின் கேமராக்களை ஆஸ்திரேலிய அரசு தனது அரசாங்க கட்டிடங்கள் உள்ளிட்ட பல முக்கியமான இடங்களில் பொறுத்தியுள்ளது. ஆனால், இந்நிறுவனங்களை சீன அரசு மிரட்டி கேமராக்களில் பதிவான சில முக்கியமான தகவல்களை கேட்டு பெறாது என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது எனவே  இந்த சந்தேகம் காரணமாக நாங்கள் சீன நிறுவனங்களின் கேமராக்களை அகற்ற இருக்கிறோம் என்று கூறியுள்ளார். அந்நாட்டின் பாதுகாப்புத்துறை கட்டிடம் உட்பட சுமார் 200 அரசு கட்டிடங்களில் சீன நிறுவனத்தின் கேமராக்கள் பொறுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பையடுத்து கேமராக்கள் விரைவில் அகற்றப்படலாம்.ஆஸ்திரேலிய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் Hikvision மற்றும் Dahua ஆகிய சீன நிறுவனங்கள் கடும் அதிருப்பதியடைந்துள்ளன. ஏனெனில் இந்த நிறுவனத்தின் கேமராக்களைதான் ஆஸ்திரேலிய மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இரு நிறுவனங்கைளும் ஏற்கெனவே அமெரிக்க அரசு பிளாக் லிஸ்ட்டில் வைத்திருக்கிறது. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய சுகாதாரச் செயலர் மாட் ஹான்காக் அவர் உதவியாளருக்கு முத்தம் ஒன்றை கொடுத்திருக்கிறார். முத்தம் கொடுத்தது பிரச்னையில்லை, ஆனால் கோவிட் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த காலம் அது.எனவே ஒருவரையொருவர் முத்தம் கொடுத்துக்கொள்ளக்கூடாது என்று உத்தரவு பின்பற்றப்பட்டு வந்திருந்தது. எனவே இந்த முத்தக்காட்சிகள் CCTVயில் பதிவாகி பின்னர் அது வெளியில் தெரிந்து பெரும் பஞ்சாயத்தை கூட்டியது. இதில் விஷயம் என்னவெனில் அந்த CCTV சீனாவை சேர்ந்த Hikvision நிறுவனத்தினுடையதாகும். ஆகவே இந்த பிரச்னைகளை பேசி Hikvision நிறுவனம் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சித்தரிப்பது தவறானது என Hikvision நிறுவனம் கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement