• Sep 22 2024

அவுஸ்திரேலியாவின் வடக்கிழக்கில் வெள்ளம்: இரவோடு இரவாக மீட்கப்பட்ட மக்கள்..!!Samugammedia

Tamil nila / Dec 18th 2023, 9:58 pm
image

Advertisement

அவுஸ்திரேலியாவின் வடக்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 300க்கும் மேற்பட்ட மக்கள் இரவோடு இரவாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் வெள்ளத்தில் சிக்காமல் கட்டடங்களின் மேற்கூரைகளில் ஏறித் தப்பினர்.

வெள்ளப் பெருக்கு காரணமாக கெய்ர்ன்ஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்து 60 பேர் வசிக்கும் இந்த நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.

கெய்ர்ன்ஸ் நகரில் மழை குறைந்தபோதிலும் அருகிலுள்ள போர்ட் டக்ளஸ், டெயின்ட்ரீ, குக்டவுன், வுஜல்வுஜல் மற்றும் ஹோப் வேலி ஆகிய பகுதிகளுக்கு கனமழை மற்றும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு இரவு மிகவும் மோசமானதாகவும் சவாலுக்குரியதாகவும் இருந்த என தெரிவித்துள்ள குயின்ஸ்லாந்து மாநில பொலிஸ் மா அதிபர் காதரினா கரோல், சுமார் 300-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பகுதிகளை இரு புயல்கள் கடந்துசென்றபோதிலும் பலத்த காற்று காரணமாக லேசான பாதிப்புகளே ஏற்பட்டுள்ளன.எனினும், கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வீதிகள், ரயில் பாதைகளில் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.பல குடியிருப்புப் பகுதிகள் தொலைத் தொடர்பு வசதிகளை இழந்தன.

14 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவின் வடக்கிழக்கில் வெள்ளம்: இரவோடு இரவாக மீட்கப்பட்ட மக்கள்.Samugammedia அவுஸ்திரேலியாவின் வடக்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 300க்கும் மேற்பட்ட மக்கள் இரவோடு இரவாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் வெள்ளத்தில் சிக்காமல் கட்டடங்களின் மேற்கூரைகளில் ஏறித் தப்பினர்.வெள்ளப் பெருக்கு காரணமாக கெய்ர்ன்ஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்து 60 பேர் வசிக்கும் இந்த நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.கெய்ர்ன்ஸ் நகரில் மழை குறைந்தபோதிலும் அருகிலுள்ள போர்ட் டக்ளஸ், டெயின்ட்ரீ, குக்டவுன், வுஜல்வுஜல் மற்றும் ஹோப் வேலி ஆகிய பகுதிகளுக்கு கனமழை மற்றும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நேற்றிரவு இரவு மிகவும் மோசமானதாகவும் சவாலுக்குரியதாகவும் இருந்த என தெரிவித்துள்ள குயின்ஸ்லாந்து மாநில பொலிஸ் மா அதிபர் காதரினா கரோல், சுமார் 300-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பகுதிகளை இரு புயல்கள் கடந்துசென்றபோதிலும் பலத்த காற்று காரணமாக லேசான பாதிப்புகளே ஏற்பட்டுள்ளன.எனினும், கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வீதிகள், ரயில் பாதைகளில் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.பல குடியிருப்புப் பகுதிகள் தொலைத் தொடர்பு வசதிகளை இழந்தன.14 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement