• Oct 09 2024

இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த அவுஸ்திரேலியா உறுதி

Chithra / Oct 2nd 2024, 3:38 pm
image

Advertisement

 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும் (Paul Stephens)இடையிலான சந்திப்பொன்று இன்று(02) கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இங்கு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதிக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இலங்கையுடனான தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில்

உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பில், கடல் பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDIs) ஊக்குவித்தல் ஆகியவற்றுடன் இலங்கை செயல்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவளிக்கிறது.

அவுஸ்திரேலியா அவ்வாறு செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீவன்சன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கு பொருளாதாரத்தின் வெளிப்படைத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை ஒரு முக்கிய அங்கமாக சுட்டிக்காட்டினார்.


இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த அவுஸ்திரேலியா உறுதி  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும் (Paul Stephens)இடையிலான சந்திப்பொன்று இன்று(02) கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.இங்கு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதிக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இலங்கையுடனான தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில்உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.இந்த சந்திப்பில், கடல் பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDIs) ஊக்குவித்தல் ஆகியவற்றுடன் இலங்கை செயல்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவளிக்கிறது.அவுஸ்திரேலியா அவ்வாறு செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீவன்சன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கு பொருளாதாரத்தின் வெளிப்படைத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை ஒரு முக்கிய அங்கமாக சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement