• Oct 19 2024

அகதிகளை மோசமாக நடத்தும் ஆஸ்திரேலியா: சர்வதேச மன்னிப்பு சபையின் புதிய அறிக்கை! samugammedia

Tamil nila / Mar 31st 2023, 6:41 pm
image

Advertisement

சமீபத்தில் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்ட பன்னாட்டு அறிக்கையில், ஆஸ்திரேலியா மனித உரிமைகளை காக்க தவறியுள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அகதிகள், பழங்குடிகளுக்கு போதிய உதவியை செய்ய ஆஸ்திரேலியா தவறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 



அத்துடன் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் அமைதியாக போராடுவதற்கு தடைகள் விதிக்கப்பட்டதாகவும் காலநிலை நெருக்கடியில் கவனம் கொள்ள ஆஸ்திரேலியா தவறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



“பல மனித உரிமை மீறல் விவகாரங்களில் ஆஸ்திரேலியா எடுத்த கொள்கை ரீதியான நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம், பழங்குடி குழந்தைகள், இளைஞர்கள் அதிகளவில் சிறைப்படுத்தப்பட்டுள்ளது, கடல் கடந்த தடுப்பில் அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்களை வைத்துள்ளது உள்ளிட்டவற்றிலும் அவ்வாறான நிலைப்பாட்டை  ஆஸ்திரேலியா கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்,” என மன்னிப்பு சபையின் ஆஸ்திரேலிய இயக்குநர் சாம் க்ளின்வொர்த் கூறியிருக்கிறார். 


ஆஸ்திரேலியாவின் மனித உரிமை சூழல் கவலையை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது எனக் கூறியுள்ள மன்னிப்பு சபை, தற்போதைய அறிக்கை ஆஸ்திரேலியாவின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்திருக்கிறது. 



அதே சமயம், ஆஸ்திரேலியாவில் உள்ள அல்லது ஆஸ்திரேலியாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் ஆண்டுக்கு 150 பேரை நியூசிலாந்தில் குடியமர்த்தும் திட்டத்தை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்டதை சர்வதேச மன்னிப்பு சபை வரவேற்றுள்ளது.  

அகதிகளை மோசமாக நடத்தும் ஆஸ்திரேலியா: சர்வதேச மன்னிப்பு சபையின் புதிய அறிக்கை samugammedia சமீபத்தில் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்ட பன்னாட்டு அறிக்கையில், ஆஸ்திரேலியா மனித உரிமைகளை காக்க தவறியுள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அகதிகள், பழங்குடிகளுக்கு போதிய உதவியை செய்ய ஆஸ்திரேலியா தவறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் அமைதியாக போராடுவதற்கு தடைகள் விதிக்கப்பட்டதாகவும் காலநிலை நெருக்கடியில் கவனம் கொள்ள ஆஸ்திரேலியா தவறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பல மனித உரிமை மீறல் விவகாரங்களில் ஆஸ்திரேலியா எடுத்த கொள்கை ரீதியான நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம், பழங்குடி குழந்தைகள், இளைஞர்கள் அதிகளவில் சிறைப்படுத்தப்பட்டுள்ளது, கடல் கடந்த தடுப்பில் அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்களை வைத்துள்ளது உள்ளிட்டவற்றிலும் அவ்வாறான நிலைப்பாட்டை  ஆஸ்திரேலியா கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்,” என மன்னிப்பு சபையின் ஆஸ்திரேலிய இயக்குநர் சாம் க்ளின்வொர்த் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் மனித உரிமை சூழல் கவலையை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது எனக் கூறியுள்ள மன்னிப்பு சபை, தற்போதைய அறிக்கை ஆஸ்திரேலியாவின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்திருக்கிறது. அதே சமயம், ஆஸ்திரேலியாவில் உள்ள அல்லது ஆஸ்திரேலியாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் ஆண்டுக்கு 150 பேரை நியூசிலாந்தில் குடியமர்த்தும் திட்டத்தை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்டதை சர்வதேச மன்னிப்பு சபை வரவேற்றுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement