• Sep 26 2026

தம்பலகாமத்தில் இளவயது திருமணத்தை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

Aathira / Sep 25th 2026, 6:47 am
image

 தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் சிறுவர், மகளிர் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இளவயது திருமணத்தை குறைப்பதற்காக முஸ்லிம் பள்ளிவாயல் நிர்வாகிகள் மேற்கொள்ளக்கூடிய பொறிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (24) தம்பலாகாமம் பொலிஸ் நிலையத்தில் இடம் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பொலிஸ் நிலைய அதிகாரிகள், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், 

பிரதேச செயலகத்தின் சிறுவர், மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு வால்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்கள், பள்ளிவாயல் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், விவாகப் பதிவாளர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் போது, தம்பலகாமம் பிரதேசத்தில் இளவயது திருமணங்களைத் தடுப்பதற்கும், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் பள்ளிவாயல் நிர்வாகங்கள் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

1. இளவயது திருமணங்களை  பிரதேச பள்ளிவாயல்களில் பதிவு செய்வதைத் தவிர்த்தல்.

2. பள்ளிவாயல்களுக்கு இளவயது திருமணம் தொடர்பாக வருகை தரும் நபர்களை உரிய ஆலோசனைகளைப் பெறுவதற்காகவும், உளவளத்துணைச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் பிரதேச செயலகத்திற்கு அனுப்புதல்.

3. வெளி மாவட்டங்களில்  பிரதேசத்தைச் சேர்ந்த முறையற்ற திருமணங்களைப் பதிவு செய்யும் பதிவாளர்கள் தொடர்பில், பிரதேச செயலகத்தின் ஊடாக உரிய நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்தல்.

4. திருமணத்தின்போது வலி விடயத்தில் உறவுமுறையை உறுதிப்படுத்துவதற்காக உரிய ஆவணங்களைப் பரிசீலனை செய்தல்.

5. இளவயது திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அத்தியாவசியக் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக பெண் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகளை பள்ளிவாயல்கள், பிரதேச செயலகத்துடன் இணைந்து முன்னெடுத்தல்.

6. இளவயது திருமணம் தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில், பொலிஸ் நிலையம் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகங்கள் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

இளவயது திருமணத்தைத் தடுப்பதன் மூலம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும் என்பதுடன், இதற்காக அரச நிறுவனங்கள், பள்ளிவாயல் நிர்வாகங்கள் மற்றும் சமூகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

தம்பலகாமத்தில் இளவயது திருமணத்தை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்  தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் சிறுவர், மகளிர் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இளவயது திருமணத்தை குறைப்பதற்காக முஸ்லிம் பள்ளிவாயல் நிர்வாகிகள் மேற்கொள்ளக்கூடிய பொறிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (24) தம்பலாகாமம் பொலிஸ் நிலையத்தில் இடம் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பொலிஸ் நிலைய அதிகாரிகள், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலகத்தின் சிறுவர், மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு வால்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்கள், பள்ளிவாயல் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், விவாகப் பதிவாளர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.கலந்துரையாடலின் போது, தம்பலகாமம் பிரதேசத்தில் இளவயது திருமணங்களைத் தடுப்பதற்கும், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் பள்ளிவாயல் நிர்வாகங்கள் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.இதன் போது எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள்1. இளவயது திருமணங்களை  பிரதேச பள்ளிவாயல்களில் பதிவு செய்வதைத் தவிர்த்தல்.2. பள்ளிவாயல்களுக்கு இளவயது திருமணம் தொடர்பாக வருகை தரும் நபர்களை உரிய ஆலோசனைகளைப் பெறுவதற்காகவும், உளவளத்துணைச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் பிரதேச செயலகத்திற்கு அனுப்புதல்.3. வெளி மாவட்டங்களில்  பிரதேசத்தைச் சேர்ந்த முறையற்ற திருமணங்களைப் பதிவு செய்யும் பதிவாளர்கள் தொடர்பில், பிரதேச செயலகத்தின் ஊடாக உரிய நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்தல்.4. திருமணத்தின்போது வலி விடயத்தில் உறவுமுறையை உறுதிப்படுத்துவதற்காக உரிய ஆவணங்களைப் பரிசீலனை செய்தல்.5. இளவயது திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அத்தியாவசியக் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக பெண் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகளை பள்ளிவாயல்கள், பிரதேச செயலகத்துடன் இணைந்து முன்னெடுத்தல்.6. இளவயது திருமணம் தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில், பொலிஸ் நிலையம் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகங்கள் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.இளவயது திருமணத்தைத் தடுப்பதன் மூலம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும் என்பதுடன், இதற்காக அரச நிறுவனங்கள், பள்ளிவாயல் நிர்வாகங்கள் மற்றும் சமூகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement