• Sep 25 2026

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை – பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

Chithra / Sep 25th 2026, 7:26 am
image


மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (25) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மத்திய மாகாண கல்விச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.


நேற்று (24) காலை முதல் மலையகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதேவேளை, மத்திய மாகாணத்தின் ஏனைய கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளை இன்று நடத்துவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அந்தந்த கல்வி வலயங்களின் அதிகாரிகள் தீர்மானிக்க முடியும் எனவும் மத்திய மாகாண கல்விச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை – பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (25) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.மத்திய மாகாண கல்விச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.நேற்று (24) காலை முதல் மலையகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, மத்திய மாகாணத்தின் ஏனைய கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளை இன்று நடத்துவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அந்தந்த கல்வி வலயங்களின் அதிகாரிகள் தீர்மானிக்க முடியும் எனவும் மத்திய மாகாண கல்விச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement