இத்தாலியின் நேபிள்ஸ் அருகே உள்ள கைவானோ பகுதியில், ஒரு வீட்டின் சுவர்கள் மற்றும் தரைப்பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 32 லட்சம் யூரோ ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இத்தாலிய கராபினியேரி படையினர் மேற்கொண்ட சோதனையின்போது, 50 யூரோ நோட்டுகளாக கட்டுக்கட்டாகச் சுற்றப்பட்டிருந்த பணம் சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பணத்தை வெளியே எடுக்க அதிகாரிகள் சுவர்களை சுத்தியலால் உடைக்க வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் 11 விலையுயர்ந்த கைக்கடிகாரங்களும், 1.27 லட்சம் யூரோவுக்கும் அதிகமான மதிப்புள்ள கடிகாரங்களும், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவர்களுக்கு பின்னால் மறைந்திருந்த ரகசியம்-அதிர்ச்சியில் உறைந்த பொலிஸார் இத்தாலியின் நேபிள்ஸ் அருகே உள்ள கைவானோ பகுதியில், ஒரு வீட்டின் சுவர்கள் மற்றும் தரைப்பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 32 லட்சம் யூரோ ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.இத்தாலிய கராபினியேரி படையினர் மேற்கொண்ட சோதனையின்போது, 50 யூரோ நோட்டுகளாக கட்டுக்கட்டாகச் சுற்றப்பட்டிருந்த பணம் சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை வெளியே எடுக்க அதிகாரிகள் சுவர்களை சுத்தியலால் உடைக்க வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனுடன் 11 விலையுயர்ந்த கைக்கடிகாரங்களும், 1.27 லட்சம் யூரோவுக்கும் அதிகமான மதிப்புள்ள கடிகாரங்களும், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.