திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் குடியிருப்பு காணிகள் மற்றும் விவசாய நிலங்கள் ஆகியவற்றை சட்டரீதியாக எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வு கடந்த புதன்கிழமை(9) திருகோணமலை குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு, இலங்கை காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, சூரிய சக்தி மின்னொளிக்காக சம்பூர் பிரதேசத்தில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள 520 ஏக்கர் காணிகள் தொடர்பாகவும், தம்பலாகமம் பிரதேச செயலக பிரிவில், இலங்கை துறைமுக அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ள, முத்து நகர் பிரதேச மக்களின் 800 ஏக்கர் காணிகள் தொடர்பாகவும் இங்கு விவாதிக்கப்பட்டன.
சம்பூர் தேசத்தில், சூரிய சக்தி மின்னொளிக்காக இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள 520 ஏக்கர் காணியில் 160 ஏக்கர் காணி மட்டுமே அரசாங்கத்துக்கு சொந்தமானது எனவும், ஏனையவை தனியாருடைய காணிகள் எனவும் இங்கு கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
அதேபோன்று, தமலாகமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, முத்து நகர் பிரதேசத்தில் மக்களால் கடந்த 53 வருடங்களாக செய்கை பண்ணப்பட்டுவந்த 800 ஏக்கர் விவசாய நிலங்கள், இலங்கை துறைமுக அதிகார சபையினால், கையகப்படுத்தப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
சம்பூர் மற்றும் முத்துநகர் ஆகிய பிரதேசங்களின் விவசாய சம்மேளன பிரதிநிதிகள், மீனவ சமூகப் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு, பொதுமக்களின் காணிகள் தொடர்பான ஆவண அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
சட்ட ரீதியாக, இந்த காணிகளை மீட்பது தொடர்பாக, சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவிடம் எழுத்து மூலமாக ஆவணங்களை முதலில் சமர்ப்பிப்பது என்றும், அதன் பின்னர், காணிப் பிரச்சினைகளோடு சம்பந்தப்பட்ட, விவசாய சம்மேளன பிரநிதிகளை அழைத்து, கொழும்பில் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்வதெனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த செயலமர்வில், இலங்கை காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணியின் தேசிய திட்ட இணைப்பாளர், சட்டத்தரணி மாலிங்க பிரசாத் மற்றும் தேசிய தேசிய மீன்வள ஒற்றுமை இயக்கத்தின் கருத்திட்ட இணைப்பாளர், சட்டத்தரணி பியங்கர கொஸ்டா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
காணிகளை மீட்பது தொடர்பில் திருமலையில் விழிப்புணர்வு செயலமர்வு. திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் குடியிருப்பு காணிகள் மற்றும் விவசாய நிலங்கள் ஆகியவற்றை சட்டரீதியாக எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வு கடந்த புதன்கிழமை(9) திருகோணமலை குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இந்த நிகழ்வு, இலங்கை காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்போது, சூரிய சக்தி மின்னொளிக்காக சம்பூர் பிரதேசத்தில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள 520 ஏக்கர் காணிகள் தொடர்பாகவும், தம்பலாகமம் பிரதேச செயலக பிரிவில், இலங்கை துறைமுக அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ள, முத்து நகர் பிரதேச மக்களின் 800 ஏக்கர் காணிகள் தொடர்பாகவும் இங்கு விவாதிக்கப்பட்டன. சம்பூர் தேசத்தில், சூரிய சக்தி மின்னொளிக்காக இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள 520 ஏக்கர் காணியில் 160 ஏக்கர் காணி மட்டுமே அரசாங்கத்துக்கு சொந்தமானது எனவும், ஏனையவை தனியாருடைய காணிகள் எனவும் இங்கு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அதேபோன்று, தமலாகமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, முத்து நகர் பிரதேசத்தில் மக்களால் கடந்த 53 வருடங்களாக செய்கை பண்ணப்பட்டுவந்த 800 ஏக்கர் விவசாய நிலங்கள், இலங்கை துறைமுக அதிகார சபையினால், கையகப்படுத்தப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.சம்பூர் மற்றும் முத்துநகர் ஆகிய பிரதேசங்களின் விவசாய சம்மேளன பிரதிநிதிகள், மீனவ சமூகப் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு, பொதுமக்களின் காணிகள் தொடர்பான ஆவண அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.சட்ட ரீதியாக, இந்த காணிகளை மீட்பது தொடர்பாக, சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.இந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவிடம் எழுத்து மூலமாக ஆவணங்களை முதலில் சமர்ப்பிப்பது என்றும், அதன் பின்னர், காணிப் பிரச்சினைகளோடு சம்பந்தப்பட்ட, விவசாய சம்மேளன பிரநிதிகளை அழைத்து, கொழும்பில் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்வதெனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த செயலமர்வில், இலங்கை காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணியின் தேசிய திட்ட இணைப்பாளர், சட்டத்தரணி மாலிங்க பிரசாத் மற்றும் தேசிய தேசிய மீன்வள ஒற்றுமை இயக்கத்தின் கருத்திட்ட இணைப்பாளர், சட்டத்தரணி பியங்கர கொஸ்டா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.