• Apr 13 2025

வரிகளை விதிக்காது நாட்டை ஆட்சி செய்ய முடியாது! அரச தரப்பு எம்.பி. பகிரங்கம்

Chithra / Apr 10th 2025, 9:42 am
image

 

வரிகளை விதிக்காது நாட்டை ஆட்சி செய்ய முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் பலிஹேன தெரிவித்துள்ளார்.

முட்டைகள் மீதான வரி புதிதாக பிறப்பிக்கப்பட்ட வரி கிடையாது என அவர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக மக்களை அணி திரட்டும் முயற்சிகளில் ஈடுபடுவதனை சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர்.

நாட்டை கொண்டு நடாத்துவதற்கு அரசாங்கத்திற்கு வருமானம் தேவை, அதில் பெறுமதி சேர் வரி மிக முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

மொத்த வரிகளில் மறைமுக வரி வருமானம் அதிகம், அதிலும் பெறுமதி சேர் வரி வருமானம் அதிகமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய வழியில் வர்த்தகம் செய்யும் சிலர் வரி செலுத்துவதில்லை எனவும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் சமனிலையான வரி அறவீட்டு முறையொன்றை அறிமுகம் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். 

வரிகளை விதிக்காது நாட்டை ஆட்சி செய்ய முடியாது அரச தரப்பு எம்.பி. பகிரங்கம்  வரிகளை விதிக்காது நாட்டை ஆட்சி செய்ய முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் பலிஹேன தெரிவித்துள்ளார்.முட்டைகள் மீதான வரி புதிதாக பிறப்பிக்கப்பட்ட வரி கிடையாது என அவர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்திற்கு எதிராக மக்களை அணி திரட்டும் முயற்சிகளில் ஈடுபடுவதனை சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர்.நாட்டை கொண்டு நடாத்துவதற்கு அரசாங்கத்திற்கு வருமானம் தேவை, அதில் பெறுமதி சேர் வரி மிக முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.மொத்த வரிகளில் மறைமுக வரி வருமானம் அதிகம், அதிலும் பெறுமதி சேர் வரி வருமானம் அதிகமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இணைய வழியில் வர்த்தகம் செய்யும் சிலர் வரி செலுத்துவதில்லை எனவும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் சமனிலையான வரி அறவீட்டு முறையொன்றை அறிமுகம் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement