• Nov 28 2024

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூற பொதுவான தினம்- ஜனாதிபதியிடம் பாபுசர்மா கோரிக்கை...!

Sharmi / Nov 25th 2024, 11:33 am
image

யுத்தத்தில் உயிரிழந்தந்தவர்களை நினைவுகூறுவதற்கு தடை இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்திருப்பது நிச்சயமாக பாராட்டத்தக்க விடயம் சர்வதேச இந்து மதபீட செயலாளர் சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த யுத்த காலத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.

அந்தவகையில் இந்த உயிரிழப்புகளை வருடம்தோறும் அவர்களுடைய உறவுகள் நினைவு கூர்ந்து வருவதை தமிழ் மக்கள் தங்கள் மத அனுஷ்டானங்களை கடைபிடித்து வருவது வழமையானதாகும். 

இம்முறை அந்த புதிய அரசு இறந்த பொதுமக்களை நினைத்து நினைவு கூறுவது என்ற யதார்த்ததை புரிந்துகொண்டு நடப்பது தமிழ் மக்களால் வரவேற்கப்படுகிறது. 

இந்த நிலையில் பொதுமக்களை நினைவுகூறும் தினத்தை ஒரு பொது விடுமுறை நாளாக அறிவித்தால் நிச்சயமாக அது தமிழ் மக்களால் அது வரவேற்கப்படும். 

அதேவேளை வடக்கில் பல காலமாக பூட்டப்பட்டிருந்த வசாவிளான் பலாலி பாதை திறப்பு ஒரு வரவேற்கத்தக்க விடயம்.  

படிப்படியாக இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு மக்களை இயல்பான நிலைக்கு கொண்டுவருவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்க விடயம்.

ஒரு சிலர் தேசிய ரீதியான பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று எதிர் தரப்பினர் பிரச்சாரம் செய்தாலும் நாட்டின் யதார்த்த நிலையை உணர்ந்து அரசு எடுக்கும் நடவடிக்கை நிச்சயமாக தமிழ் மக்களால் வரவேற்கப்படும்.

இந்த நிலையில் யுத்த காலத்தில் இறந்தவர்களை நினைவுக்கூருவதற்கு ஒரு பொது நாள் ஒன்றை அரசு ஒதுக்கி தருமாக இருந்தால் நிச்சயமாக உலக வாழ் தமிழ் மக்கள் வரவேற்பார்கள்.

அதேவேளை, வடகிழக்கு தமிழ் மக்களின் மனதை வெல்லுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமையும் . 

இது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் சக வாழ்வுக்கும் வழிவகுக்கும் என சர்வதேச இந்துமதபீட செயலாளர் சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூற பொதுவான தினம்- ஜனாதிபதியிடம் பாபுசர்மா கோரிக்கை. யுத்தத்தில் உயிரிழந்தந்தவர்களை நினைவுகூறுவதற்கு தடை இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்திருப்பது நிச்சயமாக பாராட்டத்தக்க விடயம் சர்வதேச இந்து மதபீட செயலாளர் சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.அதேவேளை, இந்த யுத்த காலத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.அந்தவகையில் இந்த உயிரிழப்புகளை வருடம்தோறும் அவர்களுடைய உறவுகள் நினைவு கூர்ந்து வருவதை தமிழ் மக்கள் தங்கள் மத அனுஷ்டானங்களை கடைபிடித்து வருவது வழமையானதாகும். இம்முறை அந்த புதிய அரசு இறந்த பொதுமக்களை நினைத்து நினைவு கூறுவது என்ற யதார்த்ததை புரிந்துகொண்டு நடப்பது தமிழ் மக்களால் வரவேற்கப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்களை நினைவுகூறும் தினத்தை ஒரு பொது விடுமுறை நாளாக அறிவித்தால் நிச்சயமாக அது தமிழ் மக்களால் அது வரவேற்கப்படும். அதேவேளை வடக்கில் பல காலமாக பூட்டப்பட்டிருந்த வசாவிளான் பலாலி பாதை திறப்பு ஒரு வரவேற்கத்தக்க விடயம்.  படிப்படியாக இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு மக்களை இயல்பான நிலைக்கு கொண்டுவருவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்க விடயம்.ஒரு சிலர் தேசிய ரீதியான பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று எதிர் தரப்பினர் பிரச்சாரம் செய்தாலும் நாட்டின் யதார்த்த நிலையை உணர்ந்து அரசு எடுக்கும் நடவடிக்கை நிச்சயமாக தமிழ் மக்களால் வரவேற்கப்படும்.இந்த நிலையில் யுத்த காலத்தில் இறந்தவர்களை நினைவுக்கூருவதற்கு ஒரு பொது நாள் ஒன்றை அரசு ஒதுக்கி தருமாக இருந்தால் நிச்சயமாக உலக வாழ் தமிழ் மக்கள் வரவேற்பார்கள்.அதேவேளை, வடகிழக்கு தமிழ் மக்களின் மனதை வெல்லுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமையும் . இது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் சக வாழ்வுக்கும் வழிவகுக்கும் என சர்வதேச இந்துமதபீட செயலாளர் சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement