• Mar 17 2026

தாயை தேடி 3 நாட்கள் தவித்த யானைக்குட்டி-பாதுகாப்பாக வனவிலங்கு கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைப்பு!

Ziya / Feb 12th 2026, 5:38 pm
image

கந்தளாய், வான்எல விகாரை காட்டுப்பகுதியில் தாயிடமிருந்து பிரிந்து தனியாகத் தவித்துக் கொண்டிருந்த சுமார் மூன்று வயதுடைய யானைக்குட்டி ஒன்று இன்று (12) வனவிலங்கு அதிகாரிகளால் மீட்கப்பட்டு மேலதிக பராமரிப்புக்காகக் கொண்டு செல்லப்பட்டது.


வான்எல விகாரை காட்டுப்பகுதியில் யானைக்குட்டி ஒன்று தனியாக நின்றிருந்ததை அவதானித்த பொதுமக்கள், அது குறித்து கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கினர். 


இதனையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள், கடந்த மூன்று நாட்களாக அந்தக் குட்டி யானையை அதன் தாயுடன் அல்லது யானைக் கூட்டத்துடன் சேர்த்து வைப்பதற்குப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.


வனவிலங்கு அதிகாரிகள் இரவு பகலாகக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு, குட்டி யானையைத் தாயிடம் சேர்க்க முயன்ற போதிலும், அந்தப் பகுதிக்கு யானைக் கூட்டங்கள் எவையும் வராத காரணத்தினால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. 


குட்டி யானை காட்டில் தனியாக இருந்தால் மற்ற விலங்குகளால் ஆபத்து ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு அதிகாரிகள் அதனை மீட்கத் தீர்மானித்தனர்.


மீட்கப்பட்ட இந்த மூன்று வயது யானைக்குட்டி, முறையான சிகிச்சை மற்றும் மேலதிக பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக கிரிதலே வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவிடம் இன்று பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. 


அங்கு கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் யானைக்குட்டிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் மருத்துவ வசதிகளும் வழங்கப்படவுள்ளன.

தாயை தேடி 3 நாட்கள் தவித்த யானைக்குட்டி-பாதுகாப்பாக வனவிலங்கு கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைப்பு கந்தளாய், வான்எல விகாரை காட்டுப்பகுதியில் தாயிடமிருந்து பிரிந்து தனியாகத் தவித்துக் கொண்டிருந்த சுமார் மூன்று வயதுடைய யானைக்குட்டி ஒன்று இன்று (12) வனவிலங்கு அதிகாரிகளால் மீட்கப்பட்டு மேலதிக பராமரிப்புக்காகக் கொண்டு செல்லப்பட்டது.வான்எல விகாரை காட்டுப்பகுதியில் யானைக்குட்டி ஒன்று தனியாக நின்றிருந்ததை அவதானித்த பொதுமக்கள், அது குறித்து கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கினர். இதனையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள், கடந்த மூன்று நாட்களாக அந்தக் குட்டி யானையை அதன் தாயுடன் அல்லது யானைக் கூட்டத்துடன் சேர்த்து வைப்பதற்குப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.வனவிலங்கு அதிகாரிகள் இரவு பகலாகக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு, குட்டி யானையைத் தாயிடம் சேர்க்க முயன்ற போதிலும், அந்தப் பகுதிக்கு யானைக் கூட்டங்கள் எவையும் வராத காரணத்தினால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. குட்டி யானை காட்டில் தனியாக இருந்தால் மற்ற விலங்குகளால் ஆபத்து ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு அதிகாரிகள் அதனை மீட்கத் தீர்மானித்தனர்.மீட்கப்பட்ட இந்த மூன்று வயது யானைக்குட்டி, முறையான சிகிச்சை மற்றும் மேலதிக பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக கிரிதலே வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவிடம் இன்று பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. அங்கு கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் யானைக்குட்டிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் மருத்துவ வசதிகளும் வழங்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement