• Nov 22 2024

புதுக்குடியிருப்பில் கோர விபத்து...! பாடசாலை மாணவியை மோதித்தள்ளிய டிபெண்டர் வாகனம்...!samugammedia

Sharmi / Dec 29th 2023, 11:54 am
image

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியினை கடக்க முற்பட்ட மாணவி மீது டிபெண்டர் வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் வீதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற டிபெண்டர் வாகனம் வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது மோதியதில் மாணவியொருவர் படுகாயமடைந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விபத்தில் காயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி வள்ளிபுனம் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவியின் காலில் உடைவு ஏற்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

அதேவேளை விபத்தினை ஏற்படுத்திய களுத்துறையை சேர்ந்த 54 வயதுடைய வாகனத்தின் சாரதி புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில்  இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தில் வந்தவர்கள் இ.போ.ச பேருந்தினை மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.





புதுக்குடியிருப்பில் கோர விபத்து. பாடசாலை மாணவியை மோதித்தள்ளிய டிபெண்டர் வாகனம்.samugammedia புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியினை கடக்க முற்பட்ட மாணவி மீது டிபெண்டர் வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.பரந்தன் வீதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற டிபெண்டர் வாகனம் வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது மோதியதில் மாணவியொருவர் படுகாயமடைந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி வள்ளிபுனம் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.குறித்த மாணவியின் காலில் உடைவு ஏற்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை விபத்தினை ஏற்படுத்திய களுத்துறையை சேர்ந்த 54 வயதுடைய வாகனத்தின் சாரதி புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில்  இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதேவேளை விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தில் வந்தவர்கள் இ.போ.ச பேருந்தினை மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement