நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 4 வகை அலங்கார மீன்களுக்கு தடை விதிக்கும் வகையிலான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தனித்துவமான நீரியல் சூழற்றொகுதியையும், தேசிய மீன் வளத்தையும் பாதுகாப்பது எமது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். அதேவேளை, நாட்டிற்கு அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் அலங்கார மீன் வளர்ப்புத் துறையை வலுப்படுத்துவதும் எமது நோக்கமாகும்.
இவ்விரு துறைகளையும் சமநிலையுடன் முகாமைத்துவம் செய்து, சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆக்கிரமிப்பு மீன் இனங்களைத் தடை செய்ய நாம் தீர்மானித்துள்ளோம்.
இது எக்காரணம் கொண்டும் அலங்கார மீன் வளர்ப்புத் துறைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல, மாறாக அதனை ஒரு நிலையான வழியில் முன்னெடுப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.
அத்துடன், தெதுரு ஓயாவில் பரவிவரும் ஆக்கிரமிப்பு மீன்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மக்கள் பங்குபற்றுதலுடன் மாபெரும் செயற்றிட்டம் ஒன்றையும் நாம் ஆரம்பிக்கவுள்ளோம் என தெரிவித்தார்.
இதன்படி, பிரானா, நைப் பிஸ், எலிகேடர் கார் மற்றும் ரெட் லைன் ஸ்னேக் ஆகிய மீன் இனங்களை இறக்குமதி செய்வதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும், 20 ஆம் திகதி முதல் குறித்த மீன் இனங்களை இனப்பெருக்கம் செய்தல், நீர் நிலைகளில் விடுதல் மற்றும் விற்பனை செய்தல் என்பன தடை செய்யப்படும் என கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 4 வகை அலங்கார மீன்களுக்கு தடை நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 4 வகை அலங்கார மீன்களுக்கு தடை விதிக்கும் வகையிலான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கையின் தனித்துவமான நீரியல் சூழற்றொகுதியையும், தேசிய மீன் வளத்தையும் பாதுகாப்பது எமது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். அதேவேளை, நாட்டிற்கு அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் அலங்கார மீன் வளர்ப்புத் துறையை வலுப்படுத்துவதும் எமது நோக்கமாகும். இவ்விரு துறைகளையும் சமநிலையுடன் முகாமைத்துவம் செய்து, சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆக்கிரமிப்பு மீன் இனங்களைத் தடை செய்ய நாம் தீர்மானித்துள்ளோம். இது எக்காரணம் கொண்டும் அலங்கார மீன் வளர்ப்புத் துறைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல, மாறாக அதனை ஒரு நிலையான வழியில் முன்னெடுப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானமாகும். அத்துடன், தெதுரு ஓயாவில் பரவிவரும் ஆக்கிரமிப்பு மீன்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மக்கள் பங்குபற்றுதலுடன் மாபெரும் செயற்றிட்டம் ஒன்றையும் நாம் ஆரம்பிக்கவுள்ளோம் என தெரிவித்தார். இதன்படி, பிரானா, நைப் பிஸ், எலிகேடர் கார் மற்றும் ரெட் லைன் ஸ்னேக் ஆகிய மீன் இனங்களை இறக்குமதி செய்வதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும், 20 ஆம் திகதி முதல் குறித்த மீன் இனங்களை இனப்பெருக்கம் செய்தல், நீர் நிலைகளில் விடுதல் மற்றும் விற்பனை செய்தல் என்பன தடை செய்யப்படும் என கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.