முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் நேற்றையதினம்(19) கரையொதுங்கிய உடலம் பங்களாதேஷ் நாட்டவருடையது என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் நேற்றையதினம்(19) காலை அடையாளம் காணமுடியாத நிலையில் உடலம் ஒன்று மிதப்பகங்களில் மிதந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரை பகுதியிலேயே குறித்த உடலம் கரை ஒதுங்கியுள்ளது.
இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு பொலிசார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைய முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரி றொகான் உடலத்தின் தடையங்களை பரிசோதனை செய்துள்ளார்.
இதன்போது உடலத்தின் உள்ள பை ஒன்றில் பங்களாதேஷ் நாட்டு பணம் காணப்பட்டுள்ளதால் உடலம் பங்களாதேஷ் நாட்டவரின் என இனம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த உடலத்தினை மாவட்ட மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன் இது குறித்து பங்களாதேஷ் மற்றும் இந்தியா நாட்டு தூதரகங்களுக்கு தகவல் தெரியப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட பங்களாதேஷ் பிரஜை.samugammedia முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் நேற்றையதினம்(19) கரையொதுங்கிய உடலம் பங்களாதேஷ் நாட்டவருடையது என தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் நேற்றையதினம்(19) காலை அடையாளம் காணமுடியாத நிலையில் உடலம் ஒன்று மிதப்பகங்களில் மிதந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரை பகுதியிலேயே குறித்த உடலம் கரை ஒதுங்கியுள்ளது.இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு பொலிசார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைய முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரி றொகான் உடலத்தின் தடையங்களை பரிசோதனை செய்துள்ளார்.இதன்போது உடலத்தின் உள்ள பை ஒன்றில் பங்களாதேஷ் நாட்டு பணம் காணப்பட்டுள்ளதால் உடலம் பங்களாதேஷ் நாட்டவரின் என இனம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த உடலத்தினை மாவட்ட மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன் இது குறித்து பங்களாதேஷ் மற்றும் இந்தியா நாட்டு தூதரகங்களுக்கு தகவல் தெரியப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.