இலங்கையின் வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றையதினம்(19) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் பேததே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வீதி அபிவிருத்திக்காக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவருக்கு 150 மில்லியன் ரூபாவும் சிறிய வீதி அபிவிருத்திக்காக கிராமிய அலுவல்கள் அமைச்சின் ஊடாக 50 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இறுதி கட்டத்தை எட்டிய வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு.அபிவிருத்தி திட்டங்கள் பெப்ரவரியில் ஆரம்பம். samugammedia இலங்கையின் வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றையதினம்(19) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் பேததே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,வீதி அபிவிருத்திக்காக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவருக்கு 150 மில்லியன் ரூபாவும் சிறிய வீதி அபிவிருத்திக்காக கிராமிய அலுவல்கள் அமைச்சின் ஊடாக 50 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.அதேவேளை வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.