• Dec 11 2024

பராட்டே சட்டத்தால் நுாற்றுக்கும் மேற்பட்டோர் உயிர்மாய்ப்பு - இன்னும் அதிகரிக்குமென எச்சரிக்கை

Chithra / Nov 4th 2024, 12:45 pm
image


நாட்டில் உள்ள வங்கிகளினால் அமுல்படுத்தப்பட்ட "பராட்டே சட்டம்" காரணமாக கடந்த வருடத்தின் தொடக்கத்தில் 127 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் உயிர்மாய்த்து கொண்டுள்ளதாக மாவட்ட ஒன்றிணைந்த தொழில் முயற்சியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தினால் இலங்கையிலுள்ள கிட்டத்தட்ட நான்கு இலட்சம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் ஏற்கனவே அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

வியாபார இடங்கள் முதல் வசிப்பிடங்களை கூட இழந்த பலர் ஏற்கனவே மிகவும் அசௌகரியமான நிலையில் இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் சம்லி குமாரசிங்க தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தை பற்றி பேசினால், நிவாரணம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பராட்டே சட்டத்தின் கீழ் சொத்துக்களை ஏலம் எடுத்த எம்மில் கிட்டத்தட்ட 127 பேர் கடந்த ஆண்டு தொடக்கத்தில் உயிர்மாய்த்து  கொண்டுள்ளனர்.

பராட்டே சட்டத்தின் கீழ் சொத்துக்கள் ஏலம் விடப்பட்ட அனைவருக்கும்  வங்கிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கவில்லை.

எங்களுக்கு வழங்கப்பட்டது நிவாரண காலம் மாத்திரம் தான். அதுவும் உண்மையில் ஒரு வட்டி பொறி.

தற்போதைய அரசாங்கத்துடன் சில கலந்துரையாடல்களை நடத்தினோம். பராட்டே சட்டம் டிசம்பர் 15 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு அமலுக்கு வரும். அப்போது 127 தற்கொலைகள் இருநூறு முந்நூறாக அதிகரிக்கும்.

பராட்டே சட்டம் இடைநிறுத்தப்பட்ட உடனே தொழில்முனைவோருக்கு முன்னேற எந்த வழியும் இல்லை.

தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் நாட்டில் வணிகத்தை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.

பராட்டே சட்டத்தால் நுாற்றுக்கும் மேற்பட்டோர் உயிர்மாய்ப்பு - இன்னும் அதிகரிக்குமென எச்சரிக்கை நாட்டில் உள்ள வங்கிகளினால் அமுல்படுத்தப்பட்ட "பராட்டே சட்டம்" காரணமாக கடந்த வருடத்தின் தொடக்கத்தில் 127 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் உயிர்மாய்த்து கொண்டுள்ளதாக மாவட்ட ஒன்றிணைந்த தொழில் முயற்சியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.இந்தச் சட்டத்தினால் இலங்கையிலுள்ள கிட்டத்தட்ட நான்கு இலட்சம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் ஏற்கனவே அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.வியாபார இடங்கள் முதல் வசிப்பிடங்களை கூட இழந்த பலர் ஏற்கனவே மிகவும் அசௌகரியமான நிலையில் இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் சம்லி குமாரசிங்க தெரிவித்தார்.கடந்த அரசாங்கத்தை பற்றி பேசினால், நிவாரணம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.பராட்டே சட்டத்தின் கீழ் சொத்துக்களை ஏலம் எடுத்த எம்மில் கிட்டத்தட்ட 127 பேர் கடந்த ஆண்டு தொடக்கத்தில் உயிர்மாய்த்து  கொண்டுள்ளனர்.பராட்டே சட்டத்தின் கீழ் சொத்துக்கள் ஏலம் விடப்பட்ட அனைவருக்கும்  வங்கிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கவில்லை.எங்களுக்கு வழங்கப்பட்டது நிவாரண காலம் மாத்திரம் தான். அதுவும் உண்மையில் ஒரு வட்டி பொறி.தற்போதைய அரசாங்கத்துடன் சில கலந்துரையாடல்களை நடத்தினோம். பராட்டே சட்டம் டிசம்பர் 15 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதன் பிறகு அமலுக்கு வரும். அப்போது 127 தற்கொலைகள் இருநூறு முந்நூறாக அதிகரிக்கும்.பராட்டே சட்டம் இடைநிறுத்தப்பட்ட உடனே தொழில்முனைவோருக்கு முன்னேற எந்த வழியும் இல்லை.தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் நாட்டில் வணிகத்தை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.

Advertisement

Advertisement

Advertisement