• Sep 19 2024

கேக்கை சுழட்டி எறிந்த பசில் - மக்கள் சாப்பிடாமல் நான் சாப்பிட மாட்டேன் என சபதம்

harsha / Dec 6th 2022, 12:26 pm
image

Advertisement

மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னால் கேக் சாப்பிட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக மையத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகமான நேற்று காலை நடைபெற்ற வைபவத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எவரும் சுதந்திரமாக அரசியல் செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை 100 வீதம் நிறைவேற்ற முடியாமல் போனமை தொடர்பில் வருந்துவதாகவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாடுபடுவேன் எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான நேரம் வந்துவிட்டதாகவும், எந்தத் தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாகவும், தன்னால் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வரமுடியாது போனதில் மகிழ்ச்சியடைவதாகவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கேக்கை சுழட்டி எறிந்த பசில் - மக்கள் சாப்பிடாமல் நான் சாப்பிட மாட்டேன் என சபதம் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னால் கேக் சாப்பிட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக மையத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகமான நேற்று காலை நடைபெற்ற வைபவத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எவரும் சுதந்திரமாக அரசியல் செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.மக்களின் எதிர்பார்ப்புகளை 100 வீதம் நிறைவேற்ற முடியாமல் போனமை தொடர்பில் வருந்துவதாகவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாடுபடுவேன் எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.தேர்தலுக்கான நேரம் வந்துவிட்டதாகவும், எந்தத் தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாகவும், தன்னால் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வரமுடியாது போனதில் மகிழ்ச்சியடைவதாகவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement