கடற்படை மற்றும் கலால் திணைக்கள அதிகாரிகளின் கூட்டுச் சுற்றிவளைப்பில், வென்னப்புவ வெள்ளமன்கரய மீன்பிடி துறைமுகத்தில் இறக்கிவிட்டு, லொறியில் ஏற்றிச் செல்லும்போதே இந்த கைப்பற்றல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
நாத்தாண்டிய கலால் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்
கைப்பற்றப்பட்ட இந்த பீடி இலைகள் இன்று பிற்பகல் ராஜகிரிய கலால் திணைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
புதிய கலால் திணைக்கள ஆணையாளர் யு.டி.என் ஜயவீரவின் மேற்பார்வையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இந்த பீடி இலைகளை ஏலத்தில் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எண்பது இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது. கடற்படை மற்றும் கலால் திணைக்கள அதிகாரிகளின் கூட்டுச் சுற்றிவளைப்பில், வென்னப்புவ வெள்ளமன்கரய மீன்பிடி துறைமுகத்தில் இறக்கிவிட்டு, லொறியில் ஏற்றிச் செல்லும்போதே இந்த கைப்பற்றல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. நாத்தாண்டிய கலால் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட இந்த பீடி இலைகள் இன்று பிற்பகல் ராஜகிரிய கலால் திணைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. புதிய கலால் திணைக்கள ஆணையாளர் யு.டி.என் ஜயவீரவின் மேற்பார்வையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட இந்த பீடி இலைகளை ஏலத்தில் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.