நாட்டை வலுவாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு பிக்குகள் முன்னின்று செயற்பட வேண்டுமென வண.தொடம்பஹல ஸ்ரீ ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு ஆசிர்வாதம் வழங்கி காலி பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களில் இராஜதந்திரியாக ரணில் விக்கிரமசிங்க முன்னணியில் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
அதற்கிணங்க, வெறுப்பு மற்றும் கோபத்தை புறந்தள்ளி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
அதேவேளை, மிகவும் கடினமான காலத்தில் நாட்டைக் காப்பாற்றிய தலைவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தொடம்பஹல ஸ்ரீ ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்தை கூட வியப்பில் ஆழ்த்தும் வகையில் உலகின் கவனத்தை இலங்கையின் பக்கம் திருப்பும் திறன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருப்பதாகவும், இக்கட்டான காலங்களில் நாட்டை சரியான பாதையில் இட்டுச் சென்ற அவரிடமே நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு பிக்குகள் முன்னின்று செயற்பட வேண்டும்- தேரர் கோரிக்கை. நாட்டை வலுவாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு பிக்குகள் முன்னின்று செயற்பட வேண்டுமென வண.தொடம்பஹல ஸ்ரீ ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு ஆசிர்வாதம் வழங்கி காலி பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களில் இராஜதந்திரியாக ரணில் விக்கிரமசிங்க முன்னணியில் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.அதற்கிணங்க, வெறுப்பு மற்றும் கோபத்தை புறந்தள்ளி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.அதேவேளை, மிகவும் கடினமான காலத்தில் நாட்டைக் காப்பாற்றிய தலைவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தொடம்பஹல ஸ்ரீ ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.சர்வதேசத்தை கூட வியப்பில் ஆழ்த்தும் வகையில் உலகின் கவனத்தை இலங்கையின் பக்கம் திருப்பும் திறன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருப்பதாகவும், இக்கட்டான காலங்களில் நாட்டை சரியான பாதையில் இட்டுச் சென்ற அவரிடமே நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.