• Mar 20 2025

மருதனார்மடத்தில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய சைக்கிள் - முதியவர் உயிரிழப்பு!

Thansita / Mar 19th 2025, 9:23 pm
image

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது  தியேட்டர் வீதி, இணுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கதிரவேலு கந்தசாமி (வயது 69) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மருதனார்மடத்தடியில் இருந்து உரும்பிராய் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன், சைக்கிளில் வந்த குறித்த முதியவர் மோதுண்டுள்ளார். 

இந்நிலையில் காயமடைந்த இருவரும் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இருப்பினும் குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இந்த விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மருதனார்மடத்தில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய சைக்கிள் - முதியவர் உயிரிழப்பு சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது  தியேட்டர் வீதி, இணுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கதிரவேலு கந்தசாமி (வயது 69) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மருதனார்மடத்தடியில் இருந்து உரும்பிராய் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன், சைக்கிளில் வந்த குறித்த முதியவர் மோதுண்டுள்ளார். இந்நிலையில் காயமடைந்த இருவரும் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இருப்பினும் குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இந்த விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement