வெளிநாடுகளில் தலைமறைமாக வாழும் இலங்கையைச் சேர்ந்த 30 போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் தலைமறைவாகவுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும்இ பாதாள உலகத் தலைவருமான ஒருவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் சட்ட நடைமுறைக்கமைய, அதற்கு சிறிது காலமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டுபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை அவ்வாறே அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கு காலம் எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கை இத்துடன் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அந்த நடவடிக்கை தொடரும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் தலைமறைமாக வாழும் பாரிய குற்றவாளிகள். இலங்கைக்கு அழைத்து வர தீவிர முயற்சி வெளிநாடுகளில் தலைமறைமாக வாழும் இலங்கையைச் சேர்ந்த 30 போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் தலைமறைவாகவுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும்இ பாதாள உலகத் தலைவருமான ஒருவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆனால் சட்ட நடைமுறைக்கமைய, அதற்கு சிறிது காலமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.டுபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை அவ்வாறே அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கு காலம் எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கை இத்துடன் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அந்த நடவடிக்கை தொடரும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.