நாட்டிற்கு வந்த சுமார் 1,000 உப்பு கொள்கலன்கள் இலங்கை சுங்கத்தில் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் 400 கொள்கலன்கள் காலக்கெடு முடிந்த பிறகு வந்தவை எனவும், மீதமுள்ள 600 கொள்கலன்கள் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் ஒப்புதல் தாமதத்தால் தேங்கியுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த 400 கொள்கலன்களுக்கு அரசாங்கம் எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை எனவும், இவை மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
சந்தையில் தற்போது போதுமான உப்பு இருப்பு இருப்பதால், நிவாரணம் எதிர்பார்க்கவில்லை எனவும், மறு ஏற்றுமதிக்கு ஆட்சேபனை இல்லை எனவும் இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டனர்.
இந்த 400 கொள்கலன்களில் உள்ள 10,000 மெட்ரிக் தொன் உப்பு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்பு இறக்குமதியில் புதிய சிக்கல்; 1,000 கொள்கலன்கள் சுங்கத்தில் தேக்கம் நாட்டிற்கு வந்த சுமார் 1,000 உப்பு கொள்கலன்கள் இலங்கை சுங்கத்தில் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதில் 400 கொள்கலன்கள் காலக்கெடு முடிந்த பிறகு வந்தவை எனவும், மீதமுள்ள 600 கொள்கலன்கள் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் ஒப்புதல் தாமதத்தால் தேங்கியுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர். இந்த 400 கொள்கலன்களுக்கு அரசாங்கம் எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை எனவும், இவை மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.சந்தையில் தற்போது போதுமான உப்பு இருப்பு இருப்பதால், நிவாரணம் எதிர்பார்க்கவில்லை எனவும், மறு ஏற்றுமதிக்கு ஆட்சேபனை இல்லை எனவும் இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டனர்.இந்த 400 கொள்கலன்களில் உள்ள 10,000 மெட்ரிக் தொன் உப்பு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.