• Aug 14 2025

நாட்டில் கேள்விக்குள்ளாகியுள்ள 14,000 சிறுவர்களின் பாதுகாப்பு! அமைச்சர் வெளியிட்ட தகவல்

Chithra / Aug 14th 2025, 10:52 am
image

 

நாட்டில் 14,000 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 700 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நேற்று நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் மரணித்தல், வெளிநாட்டுக்கு செல்லல் அல்லது போதைக்கு அடிமையாதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் குறித்த சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் 14,000 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 2,000 பேர் வரையான சிறுவர்கள் மேல் மாகாணத்தில் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் கருதி விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

நாட்டில் கேள்விக்குள்ளாகியுள்ள 14,000 சிறுவர்களின் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்  நாட்டில் 14,000 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 700 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நேற்று நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பெற்றோர் மரணித்தல், வெளிநாட்டுக்கு செல்லல் அல்லது போதைக்கு அடிமையாதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் குறித்த சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன், நாடளாவிய ரீதியில் 14,000 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 2,000 பேர் வரையான சிறுவர்கள் மேல் மாகாணத்தில் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலையில், குறித்த சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் கருதி விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement