• Aug 14 2025

செம்மணி மனிதபுதைகுழி ஸ்கேன் ஆய்வு அறிக்கை; நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்க வாய்ப்பு!

shanuja / Aug 14th 2025, 9:18 am
image

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் ஆய்வு தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 


மனிதபுதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின், இரண்டாவது அமர்வில் மீட்கப்பட்ட தடயப் பொருட்கள் மற்றும் என்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பான அறிக்கையும் இன்றைய தினம் மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அத்துடன், மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுப் பணிக்கான திகதியை நீதிமன்றத்திடம் இன்று பெற்றுக் கொள்ளவுள்ளதாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்தார். 

 

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை 45 நாட்கள் நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. 


அதற்கமைய மூன்று அமர்வுகளாக முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்ட அகழ்வுப் பணிகளில் இரண்டு அமர்வுகள் நிறைவடைந்துள்ளன. 

 

இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது அமர்வு அகழ்வுப் பணிகளின் நிறைவில் 140 எலும்புக்கூடுகள்  அகழ்ந்தெடுக்கப்பட்டன. 


இந்த நிலையிலேயே இன்றைய வழக்கில் அடுத்த கட்ட அகழ்வுப் பணிக்கான திகதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதபுதைகுழி ஸ்கேன் ஆய்வு அறிக்கை; நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்க வாய்ப்பு செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் ஆய்வு தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மனிதபுதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின், இரண்டாவது அமர்வில் மீட்கப்பட்ட தடயப் பொருட்கள் மற்றும் என்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பான அறிக்கையும் இன்றைய தினம் மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுப் பணிக்கான திகதியை நீதிமன்றத்திடம் இன்று பெற்றுக் கொள்ளவுள்ளதாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்தார்.  செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை 45 நாட்கள் நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. அதற்கமைய மூன்று அமர்வுகளாக முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்ட அகழ்வுப் பணிகளில் இரண்டு அமர்வுகள் நிறைவடைந்துள்ளன.  இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது அமர்வு அகழ்வுப் பணிகளின் நிறைவில் 140 எலும்புக்கூடுகள்  அகழ்ந்தெடுக்கப்பட்டன. இந்த நிலையிலேயே இன்றைய வழக்கில் அடுத்த கட்ட அகழ்வுப் பணிக்கான திகதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement