• Aug 14 2025

ஊழியர் சேமலாப நிதி பெறுவோருக்கு மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

Chithra / Aug 14th 2025, 9:24 am
image

2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான ஊழியர் சேமலாப நிதி (EPF) பெறும் உறுப்பினர்களின் கணக்குகளின் அறிக்கைகள், உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, உறுப்பினர்கள் தங்கள் புதுப்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கைகளை தங்கள் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு மத்திய வங்கி கோரியுள்ளது.

அதேவேளை, கணக்கு அறிக்கைகளில் வரவு வைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள், தேசிய அடையாள அட்டை எண்கள் அல்லது பங்களிப்புகள் குறித்து ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், அவற்றை 0112-206690 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தெரிவிக்கலாம் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


ஊழியர் சேமலாப நிதி பெறுவோருக்கு மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு 2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான ஊழியர் சேமலாப நிதி (EPF) பெறும் உறுப்பினர்களின் கணக்குகளின் அறிக்கைகள், உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.அதன்படி, உறுப்பினர்கள் தங்கள் புதுப்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கைகளை தங்கள் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு மத்திய வங்கி கோரியுள்ளது.அதேவேளை, கணக்கு அறிக்கைகளில் வரவு வைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள், தேசிய அடையாள அட்டை எண்கள் அல்லது பங்களிப்புகள் குறித்து ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், அவற்றை 0112-206690 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தெரிவிக்கலாம் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement