கண்டி நகரில் சுமார் 3000 முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டாலும், அவற்றில் 1861 வண்டிகள் மட்டுமே முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா குமாரி அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வருமான வரி அனுமதிப்பத்திரம் பெற்று, மாநகர சபையில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு மட்டுமே நகரில் தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்தச் சலுகையை வெறும் 300 வண்டிகள் மட்டுமே பெற்றுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை ஒரு பெரிய சவாலாக உள்ளது. இதனால் முச்சக்கர வண்டி பயன்பாட்டை ஊக்குவிக்க முடியவில்லை.
வரவு-செலவுத் திட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் 5 மில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்த்திருந்த போதிலும், இந்த நிலைமை காரணமாக அந்த இலக்கை அடைய முடியாமல் போகலாம்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஆணையாளர் வலியுறுத்தினார்.
கண்டி நகரில் பதிவு செய்யப்படாத 1500ற்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் கண்டி நகரில் சுமார் 3000 முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டாலும், அவற்றில் 1861 வண்டிகள் மட்டுமே முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா குமாரி அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.வருமான வரி அனுமதிப்பத்திரம் பெற்று, மாநகர சபையில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு மட்டுமே நகரில் தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தச் சலுகையை வெறும் 300 வண்டிகள் மட்டுமே பெற்றுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை ஒரு பெரிய சவாலாக உள்ளது. இதனால் முச்சக்கர வண்டி பயன்பாட்டை ஊக்குவிக்க முடியவில்லை. வரவு-செலவுத் திட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் 5 மில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்த்திருந்த போதிலும், இந்த நிலைமை காரணமாக அந்த இலக்கை அடைய முடியாமல் போகலாம்.இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஆணையாளர் வலியுறுத்தினார்.