• Apr 22 2025

பிக் பாஸ் அமீர் - பாவனி திருமணம் நடந்து முடிந்தது.. நாத்தனார் முடிச்சு போட்ட பிரியங்கா!

Chithra / Apr 20th 2025, 3:21 pm
image

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் காதலிக்கத் தொடங்கிய அமீர்- பாவனி ஜோடிக்கு இன்று (ஏப்ரல் 20) திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சின்னத்தம்பி' சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் பாவனி. அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.  

அதே பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் கலந்துகொண்டவர்  டான்ஸ் மாஸ்டர் அமீர்.

இருவரும் காதலித்து வந்தநிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பாவனி தனது இன்ஸ்டாகிராமில், அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு திருமண தேதியை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அமீர்- பாவனிக்கு இன்று திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. ப்ரியங்காவும் அவரது கணவரும் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இந்த திருமணத்திற்கு பிரியங்கா தான் முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார். 

அமீர்- பாவனியின் திருமணப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


பிக் பாஸ் அமீர் - பாவனி திருமணம் நடந்து முடிந்தது. நாத்தனார் முடிச்சு போட்ட பிரியங்கா தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் காதலிக்கத் தொடங்கிய அமீர்- பாவனி ஜோடிக்கு இன்று (ஏப்ரல் 20) திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சின்னத்தம்பி' சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் பாவனி. அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.  அதே பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் கலந்துகொண்டவர்  டான்ஸ் மாஸ்டர் அமீர்.இருவரும் காதலித்து வந்தநிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பாவனி தனது இன்ஸ்டாகிராமில், அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு திருமண தேதியை அறிவித்திருந்தார்.இந்நிலையில் அமீர்- பாவனிக்கு இன்று திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. ப்ரியங்காவும் அவரது கணவரும் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர்.இந்த திருமணத்திற்கு பிரியங்கா தான் முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார். அமீர்- பாவனியின் திருமணப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement