• Apr 05 2025

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள்- ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்து

Thansita / Apr 5th 2025, 1:06 pm
image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக   இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கைக்கு வந்துள்ள நிலையில் அவர் சுதந்திர சதுக்க வளாகத்தில் அமோக வரவேற்புடன் வரவேற்கப்பட்டார்.

தொடர்ந்து  இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் சற்றுமுன் கைச்சாத்திடப்பட்டன.

அந்தவகையில்

சம்பூர்  சூரிய சக்தி மின் உற்பத்தி தொகுதி நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள 5000 மதத்தலங்களுக்கான கூரைமேல் சூரிய மின் உற்பத்தி தொகுதிகள் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

வெப்பநிலைக் கட்டுப்பாட்டுடனான விவசாயக் களஞ்சியம் தம்புள்ளையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரதமர் மோடிக்கு 'மித்ர விபூஷன' கௌரவ பட்டம் வழங்கி வைத்துள்ளார்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள்- ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக   இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கைக்கு வந்துள்ள நிலையில் அவர் சுதந்திர சதுக்க வளாகத்தில் அமோக வரவேற்புடன் வரவேற்கப்பட்டார்.தொடர்ந்து  இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் சற்றுமுன் கைச்சாத்திடப்பட்டன.அந்தவகையில்சம்பூர்  சூரிய சக்தி மின் உற்பத்தி தொகுதி நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இலங்கையிலுள்ள 5000 மதத்தலங்களுக்கான கூரைமேல் சூரிய மின் உற்பத்தி தொகுதிகள் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வெப்பநிலைக் கட்டுப்பாட்டுடனான விவசாயக் களஞ்சியம் தம்புள்ளையில் திறந்து வைக்கப்பட்டது.இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரதமர் மோடிக்கு 'மித்ர விபூஷன' கௌரவ பட்டம் வழங்கி வைத்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement