கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு. கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணிக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.பிக்குகள், சர்வமத தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.பேரணியில் பங்கேற்போர் ஒல்கோட் மாவத்தையில் நுழைவதை தடுக்கும் வகையில் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. புறக்கோட்டை பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்துகொள்வதை தடுக்கும் வகையிலும் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு கொழும்பு நீதவான் தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.