அம்பலாங்கொடையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திலகபுர வீதியில் பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வதுகெதர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தல்கஸ்கொடையிலிருந்து அம்பலாங்கொடை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்து பொல்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பலாங்கொடையில் விபத்து - ஒருவர் பலி அம்பலாங்கொடையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுகுறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திலகபுர வீதியில் பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.வதுகெதர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தல்கஸ்கொடையிலிருந்து அம்பலாங்கொடை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்து பொல்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.