உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் மனிதாபிமான நோக்கில், கிண்ணியாவில் இன்று (24) இரத்ததான முகாம் ஒன்று நடைபெற்றது.
இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் கிண்ணியா கிளை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு, உயிருக்குப் போராடும் நோயாளிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கிண்ணியா குட்டித்தீவு பகுதியில் அமைந்துள்ள ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்றது.
ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இந்த மருத்துவப் பணிக்கு திருகோணமலை பொது வைத்தியசாலை மற்றும் கிண்ணியா தள வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.
திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளில், நிலவும் ரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், அவசர சிகிச்சைப் பிரிவிலுள்ள நோயாளிகளின் உயிரைக் காக்கவும் இவ்வாறான சமூகப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஏற்பாட்டாளர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
கிண்ணியாவில் இரத்ததான முகாம் உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் மனிதாபிமான நோக்கில், கிண்ணியாவில் இன்று (24) இரத்ததான முகாம் ஒன்று நடைபெற்றது. இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் கிண்ணியா கிளை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு, உயிருக்குப் போராடும் நோயாளிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கிண்ணியா குட்டித்தீவு பகுதியில் அமைந்துள்ள ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்றது.ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.இந்த மருத்துவப் பணிக்கு திருகோணமலை பொது வைத்தியசாலை மற்றும் கிண்ணியா தள வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.இதன்போது இரத்ததானம் செய்பவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு, தகுதியானவர்களிடமிருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டது.திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளில், நிலவும் ரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், அவசர சிகிச்சைப் பிரிவிலுள்ள நோயாளிகளின் உயிரைக் காக்கவும் இவ்வாறான சமூகப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஏற்பாட்டாளர்கள் இதன்போது வலியுறுத்தினர்.