• Nov 26 2024

இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள் - ரஷ்ய எல்லையில் குவிப்பு..!!

Tamil nila / May 10th 2024, 8:43 pm
image

இலங்கையின் நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ரஷ்ய எல்லையிலுள்ள கொலைகளங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

இலங்கையிலிருந்து பலகுழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இலங்கையை  சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதே எண்ணிக்கையலானவர்கள் டொனெட்ஸ்க் போன்ற பிராந்தியங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கியுபா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு கூலிப்படையினர் காணப்படுகின்றனர்.

ரஷ்ய உக்ரைன் போர்களங்களிற்கு ஆட்களை சேர்ப்பது கடந்த மூன்று மாதங்களில் தீவிரமடைந்துள்ளது.

இதேவேளை  கொழும்பில் நாளாந்தம் பத்து அல்லது 15 சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுவதாகவும், அவை ஒரு வாரத்திற்குள் கடவுச்சீட்டு வீசாவுடன் கிடைப்பதாக ,அடுத்த சில நாட்களில் அவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சுற்றுலாபயணிகளுக்கான விசாவில் செல்லும் இலங்கையர்களை வாக்னர் கூலிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்காக ரஷ்ய மொழி ஆவணமொன்றில் கைச்சாத்திடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என குறித்த முன்னாள் படைவீரர் குறிப்பிட்டுள்ளார் 

இதற்கு,சட்டத்தரணி போன்று தோற்றமளித்த இந்திய பெண் ஒருவர் தங்களிற்கு உதவியதாகவும்இ அவர் முகாம் உதவியாளராக பணிபுரிவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தம் என தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

இந்தநிலையில், ரஷ்யா - உக்ரைன் போர்முனையில் இணைந்து கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறிய ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை உறுப்பினர் ஒருவர் இன்று காலை உக்ரேனில் இருந்து நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

நாட்டை வந்தடைந்தவுடன் இவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள் - ரஷ்ய எல்லையில் குவிப்பு. இலங்கையின் நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ரஷ்ய எல்லையிலுள்ள கொலைகளங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கூறுகையில்,இலங்கையிலிருந்து பலகுழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இலங்கையை  சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதே எண்ணிக்கையலானவர்கள் டொனெட்ஸ்க் போன்ற பிராந்தியங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.கியுபா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு கூலிப்படையினர் காணப்படுகின்றனர்.ரஷ்ய உக்ரைன் போர்களங்களிற்கு ஆட்களை சேர்ப்பது கடந்த மூன்று மாதங்களில் தீவிரமடைந்துள்ளது.இதேவேளை  கொழும்பில் நாளாந்தம் பத்து அல்லது 15 சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுவதாகவும், அவை ஒரு வாரத்திற்குள் கடவுச்சீட்டு வீசாவுடன் கிடைப்பதாக ,அடுத்த சில நாட்களில் அவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.சுற்றுலாபயணிகளுக்கான விசாவில் செல்லும் இலங்கையர்களை வாக்னர் கூலிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்காக ரஷ்ய மொழி ஆவணமொன்றில் கைச்சாத்திடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என குறித்த முன்னாள் படைவீரர் குறிப்பிட்டுள்ளார் இதற்கு,சட்டத்தரணி போன்று தோற்றமளித்த இந்திய பெண் ஒருவர் தங்களிற்கு உதவியதாகவும்இ அவர் முகாம் உதவியாளராக பணிபுரிவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தம் என தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  இந்தநிலையில், ரஷ்யா - உக்ரைன் போர்முனையில் இணைந்து கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறிய ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை உறுப்பினர் ஒருவர் இன்று காலை உக்ரேனில் இருந்து நாட்டுக்கு திரும்பியுள்ளார்.நாட்டை வந்தடைந்தவுடன் இவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement