• Aug 12 2025

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணற்றில் -உயர்தர மாணவி சடலமாக மீட்பு!

Thansita / Aug 11th 2025, 8:39 pm
image

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணற்றிலிருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது.



குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகபிரிவில் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர். 

இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டது

அத்துடன், அக் கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது. 


இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார், மாநகர சபையினர், கிராம அலுவர், கிராம மக்கள், மாணவர்கள் எனப் பலரும் இணைந்து 40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்டு குறித்த மாணவியை சடலமாக மீட்டுள்ளனர் 

மாணவியை மீட்டெடுத்துகொண்டு செல்லும் போது குறித்த கல்விநிலைய சக மாணவிகள் கூக்குரலிட்டு கத்தியமையையும் அவதானிக்க முடிந்தது 


 குறித்த மாணவியின் சடலம் வவுனியா வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணற்றில் -உயர்தர மாணவி சடலமாக மீட்பு வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணற்றிலிருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது.குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகபிரிவில் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர். இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுஅத்துடன், அக் கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார், மாநகர சபையினர், கிராம அலுவர், கிராம மக்கள், மாணவர்கள் எனப் பலரும் இணைந்து 40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்டு குறித்த மாணவியை சடலமாக மீட்டுள்ளனர் மாணவியை மீட்டெடுத்துகொண்டு செல்லும் போது குறித்த கல்விநிலைய சக மாணவிகள் கூக்குரலிட்டு கத்தியமையையும் அவதானிக்க முடிந்தது  குறித்த மாணவியின் சடலம் வவுனியா வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement