• Sep 17 2024

வீதியில் நின்ற மோட்டார் சைக்கிளில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தால் பதற்றம் - பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி

Chithra / May 3rd 2024, 8:36 am
image

Advertisement


அனுராதபுரம் - கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நெல்லியாகம, பலகல, கல்கிரியாகம என்ற இடத்தில் வசித்து வந்த வஹாப்தீன் அமீன் முனவ்பர் என்ற 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்த மரணம் தொடர்பான உண்மைகள் கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

அத்துடன், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு, சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவிற்கமைய, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையை மேற்கொண்டு மரணத்திற்கான காரணம் மாரடைப்பு என குறிப்பிட்டுள்ளார்.

கல்கிரியாகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ருக்மல் ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் அதிகாரிகள் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியில் நின்ற மோட்டார் சைக்கிளில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தால் பதற்றம் - பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி அனுராதபுரம் - கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.நெல்லியாகம, பலகல, கல்கிரியாகம என்ற இடத்தில் வசித்து வந்த வஹாப்தீன் அமீன் முனவ்பர் என்ற 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்த மரணம் தொடர்பான உண்மைகள் கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.அத்துடன், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு, சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவிற்கமைய, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையை மேற்கொண்டு மரணத்திற்கான காரணம் மாரடைப்பு என குறிப்பிட்டுள்ளார்.கல்கிரியாகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ருக்மல் ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் அதிகாரிகள் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement