• Dec 27 2024

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு: வெளியான சுற்றறிக்கை

Chithra / Dec 24th 2024, 12:11 pm
image

 

அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் நேற்று அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவு எவ்வாறு வழங்குவது என்பது குறித்தும் குறித்த சுற்றறிக்கையில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இலாபத்தை ஈட்டியுள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 25,000 அல்லது 20,000 ரூபாவை மேலதிக கொடுப்பனவாக வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டு வரிக்குப் பிந்திய இலாபத்தில் குறைந்தது 30 வீதத்தை ஈவுத்தொகையாகவோ அல்லது வரியாகவோ கூட்டு நிதிக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கை மூலம் உரிய மேலதிக கொடுப்பனவு வழங்குவதில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு: வெளியான சுற்றறிக்கை  அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் நேற்று அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவு எவ்வாறு வழங்குவது என்பது குறித்தும் குறித்த சுற்றறிக்கையில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.மேலும் இலாபத்தை ஈட்டியுள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 25,000 அல்லது 20,000 ரூபாவை மேலதிக கொடுப்பனவாக வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டு வரிக்குப் பிந்திய இலாபத்தில் குறைந்தது 30 வீதத்தை ஈவுத்தொகையாகவோ அல்லது வரியாகவோ கூட்டு நிதிக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த சுற்றறிக்கை மூலம் உரிய மேலதிக கொடுப்பனவு வழங்குவதில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement