ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளை வழங்குவதில் திறைசேரியின் அனுமதியின்றி இலங்கை முதலீட்டுச் சபை பணம் செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2022ஆம் ஆண்டு தொடர்பான தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த ஆண்டில், திறைசேரியின் அனுமதியின்றி ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளுக்காக இலங்கை முதலீட்டுச் சபை கிட்டத்தட்ட 61 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேலதிக கொடுப்பனவுகளுக்காக கிட்டத்தட்ட 07 கோடி ரூபாயும், ஏனைய கொடுப்பனவுகளுக்காக 54 கோடி ரூபாவிற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில், மேற்படி கொடுப்பனவுகள் தொடர்பில் திறைசேரியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
திறைசேரியின் அனுமதியின்றி ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள். வெளியான அறிக்கை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளை வழங்குவதில் திறைசேரியின் அனுமதியின்றி இலங்கை முதலீட்டுச் சபை பணம் செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.2022ஆம் ஆண்டு தொடர்பான தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, குறித்த ஆண்டில், திறைசேரியின் அனுமதியின்றி ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளுக்காக இலங்கை முதலீட்டுச் சபை கிட்டத்தட்ட 61 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.அதன்படி, மேலதிக கொடுப்பனவுகளுக்காக கிட்டத்தட்ட 07 கோடி ரூபாயும், ஏனைய கொடுப்பனவுகளுக்காக 54 கோடி ரூபாவிற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இது தொடர்பில், மேற்படி கொடுப்பனவுகள் தொடர்பில் திறைசேரியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.