யாழ்ப்பாணம் - குருநகர் கடலில் சிறுவன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.
குருநகர் பகுதியில் கடலட்டைப் பண்ணையை பார்க்க நேற்று இரவு சென்ற சிறுவன் காணாமல்போயிருந்தார். சிறுவனை தேடி அப்பகுதி மக்கள் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் படகிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணையை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
குருநகர் கடலில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; கடலட்டைப் பண்ணையை பார்க்க சென்ற நிலையில் துயரம் யாழ்ப்பாணம் - குருநகர் கடலில் சிறுவன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.குருநகர் பகுதியில் கடலட்டைப் பண்ணையை பார்க்க நேற்று இரவு சென்ற சிறுவன் காணாமல்போயிருந்தார். சிறுவனை தேடி அப்பகுதி மக்கள் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில் இன்று காலை குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சிறுவன் படகிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணையை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.