யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன் பயணித்த வானிலிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இன்று (10) அதிகாலை சுமார் 1.15 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சந்தேகத்திற்கிடமான 'ஹயஸ்' ரக வாகனம் ஒன்றை பொலிஸார் மறித்துள்ளனர்.
பொலிஸாரின் கட்டளையை மீறி அந்த வாகனம் நிற்காமல் சென்றதுடன், திடீரென மீண்டும் திரும்பி கடமையில் இருந்த பொலிஸாரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார், தற்காப்புக்காகவும் வாகனத்தை நிறுத்தவும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகின்றது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் வாகனத்தில் பயணித்த வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயது இளைஞன் தலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துளளார்.
சம்பவத்தின் போது குறித்த ஹயஸ் வாகனத்தில் வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவர் பயணித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனைத் தவிர, ஏனைய இருவரையும் பொலிஸார் அதே இடத்தில் வைத்து கைது செய்தனர்.
சம்பவத்தையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் நளினி சுபாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது சிறுவன் பயணித்த வானிலிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சிறுவனுடன் பயணித்த மற்றைய இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பொலிஸார் காசுக்காக தமது பிள்ளையை சுட்டுக்கொன்று விட்டார்கள் என்று சிறுவனின் சித்தி ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன்; பயணித்த வானிலிருந்து வாள் மீட்பு யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன் பயணித்த வானிலிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.இன்று (10) அதிகாலை சுமார் 1.15 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சந்தேகத்திற்கிடமான 'ஹயஸ்' ரக வாகனம் ஒன்றை பொலிஸார் மறித்துள்ளனர்.பொலிஸாரின் கட்டளையை மீறி அந்த வாகனம் நிற்காமல் சென்றதுடன், திடீரென மீண்டும் திரும்பி கடமையில் இருந்த பொலிஸாரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார், தற்காப்புக்காகவும் வாகனத்தை நிறுத்தவும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகின்றது.இந்தத் துப்பாக்கிச் சூட்டில் வாகனத்தில் பயணித்த வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயது இளைஞன் தலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துளளார். சம்பவத்தின் போது குறித்த ஹயஸ் வாகனத்தில் வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவர் பயணித்துள்ளனர்.உயிரிழந்த இளைஞனைத் தவிர, ஏனைய இருவரையும் பொலிஸார் அதே இடத்தில் வைத்து கைது செய்தனர். சம்பவத்தையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் நளினி சுபாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது சிறுவன் பயணித்த வானிலிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சிறுவனுடன் பயணித்த மற்றைய இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை பொலிஸார் காசுக்காக தமது பிள்ளையை சுட்டுக்கொன்று விட்டார்கள் என்று சிறுவனின் சித்தி ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.