வீதியைக் கடக்க முற்பட்ட சிறுவனை தனியார் பேருந்து மோதித் தள்ளியதில் சிறுவன் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் மட்டக்களப்பு - பதுளை பிரதான வீதியில் உறுகாமம் பிரதேசத்தில் நேற்று (6) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உறுகாமம் பிரதேசதைச் சேர்ந்த புவனேஸ்வரன் கபிஷேக் என்ற ஏழு வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.
மதபோதகர் ஒருவரது பிரியாவிடை நிகழ்விற்காக மகாஓயா பிரதேசத்திற்குச் சென்று வீடுதிரும்பும்போது குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
சிறுவனின் தாயார் பேருந்திலிருந்து அவரை கீழே இறக்கிவிட்டு மகளை இறக்குவதற்காக மீண்டும் பஸ்ஸில் ஏறியுள்ளார். சிறுவன் நிறுத்தப்பட்ட பஸ்ஸின் முன்புறமாக வீதியைக் கடந்து செல்லமுற்பட்ட வேளையில் அதேவழியாக வேகமாகப் பயணித்த தனியார் பேருந்து சிறுவனை மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் படுகாயமடைந்த சிறுவன் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து சடலம் மீதான விசாரணைகளை திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்எஸ்எம்.நசிர் மேற்கொண்டார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தாயின் கண்முன்னே தூக்கி வீசப்பட்ட சிறுவன் - மட்டக்களப்பில் சோகம் வீதியைக் கடக்க முற்பட்ட சிறுவனை தனியார் பேருந்து மோதித் தள்ளியதில் சிறுவன் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் மட்டக்களப்பு - பதுளை பிரதான வீதியில் உறுகாமம் பிரதேசத்தில் நேற்று (6) இடம்பெற்றுள்ளது. விபத்தில் உறுகாமம் பிரதேசதைச் சேர்ந்த புவனேஸ்வரன் கபிஷேக் என்ற ஏழு வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். மதபோதகர் ஒருவரது பிரியாவிடை நிகழ்விற்காக மகாஓயா பிரதேசத்திற்குச் சென்று வீடுதிரும்பும்போது குறித்த விபத்து சம்பவித்துள்ளது. சிறுவனின் தாயார் பேருந்திலிருந்து அவரை கீழே இறக்கிவிட்டு மகளை இறக்குவதற்காக மீண்டும் பஸ்ஸில் ஏறியுள்ளார். சிறுவன் நிறுத்தப்பட்ட பஸ்ஸின் முன்புறமாக வீதியைக் கடந்து செல்லமுற்பட்ட வேளையில் அதேவழியாக வேகமாகப் பயணித்த தனியார் பேருந்து சிறுவனை மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் படுகாயமடைந்த சிறுவன் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து சடலம் மீதான விசாரணைகளை திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்எஸ்எம்.நசிர் மேற்கொண்டார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.