• Apr 19 2026

இலஞ்சம் பெற்ற முல்லைத்தீவு வைத்தியசாலை கணக்காளர், உதவியாளர் கைது

Chithra / Apr 19th 2026, 1:11 pm
image

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் கணக்காளர் மற்றும் மேலாண்மை உதவியாளர் ஆகிய இருவர் 30,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் வழங்கிய புகாரின் அடிப்படையில் நேற்று (18) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.


புகார்தாரர் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் படுக்கை விரிப்புகளை சலவை செய்யும் ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகிறார். 


அவரது மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவு காசோலையை விடுவிப்பதற்காக இந்த இலஞ்சப் பணம் கோரப்பட்டுள்ளது.


காசோலையை விடுவிக்க 30,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றபோது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். 

இது குறித்த மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.

இலஞ்சம் பெற்ற முல்லைத்தீவு வைத்தியசாலை கணக்காளர், உதவியாளர் கைது முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் கணக்காளர் மற்றும் மேலாண்மை உதவியாளர் ஆகிய இருவர் 30,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் வழங்கிய புகாரின் அடிப்படையில் நேற்று (18) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.புகார்தாரர் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் படுக்கை விரிப்புகளை சலவை செய்யும் ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவு காசோலையை விடுவிப்பதற்காக இந்த இலஞ்சப் பணம் கோரப்பட்டுள்ளது.காசோலையை விடுவிக்க 30,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றபோது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement