• Dec 03 2024

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவின் பணிகள் மாகாண ரீதியில் விஸ்தரிக்கப்படும் - இம்ரான் மகரூப்

Tharmini / Oct 28th 2024, 2:02 pm
image

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் போது இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிகள் விஸ்தரிக்கப்படும் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி தலைமை வேட்பாளர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

இன்று (28) திங்கட்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொழும்பில் அமைந்துள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு பொதுமக்கள் அதிகளவில் முறைப்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த வருடம் முதல் 9 மாத காலப்பகுதியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் முறைப்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த ஆணைக்குழுவின் தற்போதைய ஆளணி மற்றும் வசதிகள் குறைவு காரணமாக விசாரணைகளைத் துரிதப்படுத்த முடியாதுள்ளது. அதிக தாமதங்கள் ஏற்படுகின்றன. சில விசாரணைகள் இரண்டு, மூன்று வருடங்கள் வரை செல்வதாகத் தெரியவருகின்றது. இதனால் ஊழலை விரைவாகக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் இந்த ஆணைக்குழுவின் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு மாகாண மட்ட அலுவலகங்களை தாபிக்க நடவடிக்கை எடுப்போம். இதற்கு தேவையான சட்டத்திருத்தங்களை முன்னெடுப்போம். இதன்படி மேல்மாகாணம் தவிர்ந்த ஏனைய 8 மாகாணங்களிலும் மாகாண அலுவலகங்கள் தாபிக்கப்படும்.

இதன் மூலம் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டோருக்கு எதிராக துரிதமாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். பொதுமக்கள் எதிர்பார்க்கும் ஊழலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவு படுத்தமுடியும்.

எனவே, நாட்டில் ஊழலைக்கட்டுப் படுத்தும் கொள்கையை முன்னெடுத்து வரும் சஜித் பிரேதமாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவின் பணிகள் மாகாண ரீதியில் விஸ்தரிக்கப்படும் - இம்ரான் மகரூப் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் போது இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிகள் விஸ்தரிக்கப்படும் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி தலைமை வேட்பாளர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.இன்று (28) திங்கட்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,கொழும்பில் அமைந்துள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு பொதுமக்கள் அதிகளவில் முறைப்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த வருடம் முதல் 9 மாத காலப்பகுதியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் முறைப்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.எனினும் இந்த ஆணைக்குழுவின் தற்போதைய ஆளணி மற்றும் வசதிகள் குறைவு காரணமாக விசாரணைகளைத் துரிதப்படுத்த முடியாதுள்ளது. அதிக தாமதங்கள் ஏற்படுகின்றன. சில விசாரணைகள் இரண்டு, மூன்று வருடங்கள் வரை செல்வதாகத் தெரியவருகின்றது. இதனால் ஊழலை விரைவாகக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.எனவே, ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் இந்த ஆணைக்குழுவின் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு மாகாண மட்ட அலுவலகங்களை தாபிக்க நடவடிக்கை எடுப்போம். இதற்கு தேவையான சட்டத்திருத்தங்களை முன்னெடுப்போம். இதன்படி மேல்மாகாணம் தவிர்ந்த ஏனைய 8 மாகாணங்களிலும் மாகாண அலுவலகங்கள் தாபிக்கப்படும்.இதன் மூலம் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டோருக்கு எதிராக துரிதமாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். பொதுமக்கள் எதிர்பார்க்கும் ஊழலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவு படுத்தமுடியும்.எனவே, நாட்டில் ஊழலைக்கட்டுப் படுத்தும் கொள்கையை முன்னெடுத்து வரும் சஜித் பிரேதமாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement