ஏறாவூரில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, ஆடைகள் களையப்பட்ட நிலையில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய 16 வயதுடைய மற்றொரு சிறுவனை ஏறாவூர் பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் மூவர் தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளின் படி, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி மற்றும் தளவாய் பகுதிகளில் சிறுவர்களைக் கொண்ட பல குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், இக்குழுக்களுக்கு இடையிலான நீண்டகால மோதலே இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த நோன்புப் பெருநாள் காலப்பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பகைமையின் காரணமாக, எதிர்த்தரப்பைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் தனியாகச் சென்றபோது கடத்தப்பட்டு ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு மரமொன்றில் தலைகீழாகக் கட்டப்பட்டு, ஆடைகள் களையப்பட்டுக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சிறுவர் குழுக்களை அந்தப் பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரே பின்னணியில் இருந்து இயக்கி வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இக்குழுக்கள் மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் கோடாரிகளுடன் நடமாடி வருவதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுவன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இவ்வாறு கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டதில், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அண்மையிலேயே சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் நேற்று திங்கட்கிழமை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து வீடியோ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஏறாவூர் பொலிஸார், தலைமறைவாக உள்ள ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஏறாவூரில் சிறுவனை கடத்தி நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல் - சிறுவன் கைது ஏறாவூரில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, ஆடைகள் களையப்பட்ட நிலையில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய 16 வயதுடைய மற்றொரு சிறுவனை ஏறாவூர் பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் மூவர் தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸ் விசாரணைகளின் படி, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி மற்றும் தளவாய் பகுதிகளில் சிறுவர்களைக் கொண்ட பல குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், இக்குழுக்களுக்கு இடையிலான நீண்டகால மோதலே இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.கடந்த நோன்புப் பெருநாள் காலப்பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பகைமையின் காரணமாக, எதிர்த்தரப்பைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் தனியாகச் சென்றபோது கடத்தப்பட்டு ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு மரமொன்றில் தலைகீழாகக் கட்டப்பட்டு, ஆடைகள் களையப்பட்டுக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.இந்த சிறுவர் குழுக்களை அந்தப் பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரே பின்னணியில் இருந்து இயக்கி வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இக்குழுக்கள் மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் கோடாரிகளுடன் நடமாடி வருவதாகக் கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட சிறுவன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இவ்வாறு கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டதில், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அண்மையிலேயே சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் நேற்று திங்கட்கிழமை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து வீடியோ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஏறாவூர் பொலிஸார், தலைமறைவாக உள்ள ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.