2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று(09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதன்படி, இரண்டாம் வாசிப்பு விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் பெப்ரவரி 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பும் 25 ஆம் திகதி பிற்பகல் இடம்பெறவுள்ளது.
பெப்ரவரி 27ஆம் திகதிக்கும் மார்ச் 21ஆம் திகதிக்கும் இடையில் குழு விவாதம் அல்லது வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு நடத்தப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு புதிய வேட்புமனுக்களை கோருவது தொடர்பான உள்ளூராட்சி சபைத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அரச நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட இது தொடர்பான சட்டமூலம் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பிறகு, உள்ளாட்சித் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றுக்கு. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று(09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.அதன்படி, இரண்டாம் வாசிப்பு விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் பெப்ரவரி 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பும் 25 ஆம் திகதி பிற்பகல் இடம்பெறவுள்ளது.பெப்ரவரி 27ஆம் திகதிக்கும் மார்ச் 21ஆம் திகதிக்கும் இடையில் குழு விவாதம் அல்லது வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு நடத்தப்படவுள்ளது.வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளது.இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு புதிய வேட்புமனுக்களை கோருவது தொடர்பான உள்ளூராட்சி சபைத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.அரச நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட இது தொடர்பான சட்டமூலம் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பிறகு, உள்ளாட்சித் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.