மஹியங்கனை - தியத்தலாவை வீதியில் 48ஆவது மைல்கல் அருகே இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, குழந்தை ஒன்று காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தியத்தலாவையில் இருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவர்கள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரும் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மஹியங்கனையைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மஹியங்கனையில் பேருந்து விபத்து; பெண் உயிரிழப்பு குழந்தை காயம் மஹியங்கனை - தியத்தலாவை வீதியில் 48ஆவது மைல்கல் அருகே இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, குழந்தை ஒன்று காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தியத்தலாவையில் இருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவர்கள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த இருவரும் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் மஹியங்கனையைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.