இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் நேற்று பேருந்தொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பேருந்து 30 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்தபோது,
எதிர்பாராத விதமாக மலைப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மண்ணுக்குள் சிக்கியவர்களை
மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இருப்பினும் சம்பவத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்துக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் என்னுடைய நினைவுகள் உள்ளன. காயமடைந்த நபர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு 2 லட்சம் ரூபா மற்றும் காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்படும் என அதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.
நிலச்சரிவில் சிக்கிப் புதைந்த பேருந்து; 18 பேர் பரிதாபமாக பலி இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் நேற்று பேருந்தொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த பேருந்து 30 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மலைப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.இருப்பினும் சம்பவத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்துக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் என்னுடைய நினைவுகள் உள்ளன. காயமடைந்த நபர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு 2 லட்சம் ரூபா மற்றும் காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்படும் என அதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.